1 ⁽அதற்குத் தேமானியனான எலிப்பாசு␢ சொன்னான்:⁾

2 ⁽வெற்று அறிவினால் ஞானி␢ விடையளிக்கக்கூடுமோ?␢ வறண்ட கீழ்க்காற்றினால்␢ வயிற்றை அவன் நிரப்பவோ?⁾

3 ⁽பயனிலாச் சொற்களாலோ,␢ பொருளிலாப் பொழிவினாலோ␢ அவன் வழக்காடத் தகுமோ?⁾

4 ⁽ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;␢ இறைச்சிந்தனை இல்லாது போனீர்.⁾

5 ⁽உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;␢ வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.⁾

6 ⁽கண்டனம் செய்தது உம் வாயே;␢ நானல்ல; உம் உதடே␢ உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.⁾

7 ⁽மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?␢ மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?⁾

8 ⁽கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?␢ ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?⁾

9 ⁽எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?␢ எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?⁾

10 ⁽நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,␢ நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர்␢ எங்களிடை உள்ளனர்.⁾

11 ⁽கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்␢ உமக்கு அற்பமாயினவோ?⁾

12 ⁽மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?␢ உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?⁾

13 ⁽அதனால், இறைவனுக்கு எதிராய்␢ உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;␢ வாயில் வந்தபடி␢ வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.⁾

14 ⁽மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?␢ நேர்மையாளராய் இருக்கப்␢ பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?⁾

15 ⁽வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;␢ வானங்களும் அவர்தம் கண்முன்␢ தூயவையல்ல;⁾

16 ⁽தீமையை தண்ணீர் போல் குடிக்கும்␢ அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்␢ எத்துணை இழிந்தோர் ஆவர்?⁾

17 ⁽கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;␢ நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;⁾

18 ⁽ஞானிகள் உரைத்தவை அவை!␢ அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!⁾

19 ⁽அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;␢ அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.⁾

20 ⁽துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர்␢ தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள்␢ கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.⁾

21 ⁽திகிலளிக்கும் ஒலி␢ அவர்களின் செவிகளில் கேட்கும்;␢ நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.⁾

22 ⁽அவர்கள் இருளினின்று தப்பிக்கும்␢ நம்பிக்கை இழப்பர்;␢ வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.⁾

23 ⁽எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;␢ இருள்சூழ்நாள்␢ அண்மையில் உள்ளதென்று அறிவர்.⁾

24 ⁽இன்னலும் இடுக்கணும்␢ அவர்களை நடுங்க வைக்கும்;␢ போருக்குப் புறப்படும் அரசன்போல்␢ அவை அவர்களை மேற்கொள்ளும்.⁾

25 ⁽ஏனெனில், இறைவனுக்கு எதிராக␢ அவர்கள் கையை ஓங்கினர்;␢ எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.⁾

26 ⁽வணங்காக் கழுத்தோடும்␢ வலுவான பெரிய கேடயத்தோடும்,␢ அவரை எதிர்த்து வந்தனர்.⁾

27 ⁽ஏனெனில், அவர்களின் முகத்தைக்␢ கொழுப்பு மூடியுள்ளது;␢ அவர்களின் தொந்தி பருத்துள்ளது.⁾

28 ⁽பாழான பட்டணங்களிலும்,␢ எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,␢ இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும்␢ அவர்கள் குடியிருப்பர்.⁾

29 ⁽அவர்கள் செல்வர் ஆகார்;␢ அவர்களின் சொத்தும் நில்லாது;␢ அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.⁾

30 ⁽இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;␢ அவர்களது தளிரை அனல் வாட்டும்.␢ அவர்களது மலர்␢ காற்றில் அடித்துப்போகப்படும்.⁾

31 ⁽வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;␢ ஏனெனில், வெறுமையே␢ அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.⁾

32 ⁽அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே␢ அது நடக்கும்;␢ அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;⁾

33 ⁽பிஞ்சுகளை உதிர்க்கும்␢ திராட்சைச் செடிபோன்றும்␢ பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும்␢ அவர்கள் இருப்பர்.⁾

34 ⁽ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்␢ கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்␢ கூடாரம் எரியுண்ணும்.⁾

35 ⁽இன்னலைக் கருவுற்று அவர்கள்␢ இடுக்கண் ஈன்றெடுப்பர்;␢ வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.⁾

Job 15 ERV IRV TRV