மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறுதுவக்கிக் கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,
தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,
கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,
இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள சமபூமி முழுவதும்,
சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப்பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன்,
யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,
மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.
| And the land | וְהָאָ֣רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| of the Giblites, | הַגִּבְלִ֗י | haggiblî | ha-ɡeev-LEE |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| Lebanon, | הַלְּבָנוֹן֙ | hallĕbānôn | ha-leh-va-NONE |
| toward the sunrising, | מִזְרַ֣ח | mizraḥ | meez-RAHK |
| הַשֶּׁ֔מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh | |
| from Baal-gad | מִבַּ֣עַל | mibbaʿal | mee-BA-al |
| under | גָּ֔ד | gād | ɡahd |
| mount | תַּ֖חַת | taḥat | TA-haht |
| Hermon | הַר | har | hahr |
| unto | חֶרְמ֑וֹן | ḥermôn | her-MONE |
| the entering | עַ֖ד | ʿad | ad |
| into Hamath. | לְב֥וֹא | lĕbôʾ | leh-VOH |
| חֲמָֽת׃ | ḥămāt | huh-MAHT |