1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.
2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.
3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.
4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.
5. கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
கடாட்சம் வைத்து ஆளுமே;
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்.
Aa Paakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே Lyrics in English
1. Aa paakkiya theyva paktharae;
Um neennda por mutinthathae;
Vettikonntae, sarvaayutham
Vaiththuvittir karththaavidam;
Seer paktharae, amarnthu neer
Yesuvin paathaththil vaalveer.
2. Aa paakkiya theyva paktharae;
Maa aluppaam pirayaanaththai
Mutiththu, ini alaivum
Sorvum illaamal vaalnthidum;
Seer paktharae, amarnthu neer
Nal veettil ilaippaaraுveer.
3. Aa paakkiya theyva paktharae;
Ijjeeva yaaththirai oynthathae;
Ippothapaaya puyalum
Ummaich seraathu kinjiththum;
Seer paktharae, amarnthu neer
Inpath thuraiyil thanguveer.
4. Aa paakkiya theyva paktharae;
Um maeni mannnnil thoongavae,
Maannpaay elumpumalavum
Viliththuk kaaththukkonntirum;
Seer paktharae, makilnthu neer
Nam raajaa varuvaar enpeer.
5. Kaelum, thooyorin naatharae,
Parinthu paesum meetparae,
Vaal naal ellaam, nallaaviyae,
Kadaatcham vaiththu aalumae;
Seer paktharodu naangalum
Maelokil serach seythidum.
PowerPoint Presentation Slides for the song Aa Paakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Paakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே PPT
Aa Paakkiya Deiva Baktharae PPT

