Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanantha Paadalgal Paadiduven - ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் – 2
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்ல
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே – 2

மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்

நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரினில் என்னை வெற்றிச் சிறக்கச் செய்தே

அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
பொற்பரன் சேவையின் சோகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே

கானானின் கரையிதோ காண்கின்றதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்

ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னரிடம்

Aanantha Paadalgal Paadiduven Lyrics Lyrics in English

Aananthap paadalkal paadiduvaen enthan aaththuma naesaraip pukalnthiduvaen – 2 alaichchalkal yaavaiyum akalach seythae – nalla maeychchalil enthanai makilach seythae – 2 maeloka naadenthan sonthamathae – intha pooloka naattamum kuraikintathae maayaiyil manamini vaiththidaamal – naesar kaayamathai ennnni vaalnthiduvaen nampikkai attaோnaay alaintha vaelai Yesunaathar enpakkamaay vanthanarae paavangal paarangal parakkach seythae – inthap paarinil ennai vettich sirakkach seythae arputhamaam avar naesamathu – enthan porparan sevaiyin sokamathu parpala kirupaikal pakarukintar – aelai karpudan avar panni seythidavae kaanaanin karaiyitho kaannkintathae – enthan naatharin thoni kaathil kaetkintathae kaalam ini illai unarnthiduvom viraivaaka nam ottaththil odiduvom alaiththavarae avar unnmaiyullor – tham alaippathil vilippudan niraுththa vallor ulaiththiduvaen mika ookkamudan – angu pilaiththidavae anpar samookamathil jepamathai kaetdidum jeevanulla – Dhevan en pithaa aanathaal aananthamae aeraெduppom nam ithayamathai – entum maaraamal pathil tharum mannaridam

PowerPoint Presentation Slides for the song Aanantha Paadalgal Paadiduven Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanantha Paadalgal Paadiduven – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் PPT
Aanantha Paadalgal Paadiduven PPT

செய்தே எந்தன் நம் ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அலைச்சல்கள் யாவையும் அகலச் நல்ல மேய்ச்சலில் எந்தனை மகிழச் மேலோக நாடெந்தன் தமிழ்