பல்லவி
ஆதியாம் மகா ராஜனே – எந்த வேளையும்
அடியனோடிரும் ஈசனே
அனுபல்லவி
தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா
பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால் – ஆதியாம்
1. பாவி பெலனால் ஐயனே – நின்றால் என்னைப்
பகைவர் ஜெயிப்பார் மெய்யனே;
தேவா துணை நீர் ஐயனே – சிறியனிடம்
சேர்ந்தே வசியும் துய்யனே
மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே;
சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும் – ஆதியாம்
2. இரக்கம் பொழிய வாருமே – கிருபையாக
இறைவா என்னிடம் சேருமே;
உருக்கம் நிறைந்த நீருமே – அனவரதம்
உந்தன் அருளைத் தாருமே;
செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்
திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள் புரியும் – ஆதியாம்
3. எந்தன் மரண மட்டுமே – அருகில் நீரே
இருந்தால் மகா இஷ்டமோ;
எந்த அகிதர் கெட்டுமே – இமைப் பொழுதில்
ஏகிப் போவார் திட்டமே;
தந்தை சுதன் நீரல்லால் தஞ்சம் வேறாரும் இல்லை
விந்தை மேவும் கதியில் மேம்னையுடன் வாழ்கவே – ஆதியாம்
Aathiyaam Maha Rajanae – ஆதியாம் மகா ராஜனே Lyrics in English
Pallavi aathiyaam makaa raajanae – entha vaelaiyum atiyanotirum eesanae anupallavi theethillaa saruvaesaa thaesuraுm pirakaasaa paathakan yaan miku palaveenan aanathaal – aathiyaam 1. Paavi pelanaal aiyanae – nintal ennaip pakaivar jeyippaar meyyanae; thaevaa thunnai neer aiyanae – siriyanidam sernthae vasiyum thuyyanae maevum thanjam enakku vaenndum kaavalan neerae; saavuvaraiyum ennaith thaangi aravannaiyum – aathiyaam 2. Irakkam poliya vaarumae – kirupaiyaaka iraivaa ennidam serumae; urukkam niraintha neerumae – anavaratham unthan arulaith thaarumae; serukkaay emmee thikalor setham seyya ninaikkum thirukkai akatti ennil thinamum arul puriyum – aathiyaam 3. Enthan marana mattumae – arukil neerae irunthaal makaa ishdamo; entha akithar kettumae – imaip poluthil aekip povaar thittamae; thanthai suthan neerallaal thanjam vaeraarum illai vinthai maevum kathiyil maemnaiyudan vaalkavae – aathiyaam
PowerPoint Presentation Slides for the song Aathiyaam Maha Rajanae – ஆதியாம் மகா ராஜனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyaam Maha Rajanae – ஆதியாம் மகா ராஜனே PPT
Aathiyaam Maha Rajanae PPT

