தமிழ்

Adaikalame Umathadiai Naane - அடைக்கலமே உமதடிமை நானே

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே – ஆ

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமதே – ஆ

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே – ஆ

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே – ஆ

Adaikalame Umathadiai Naane Lyrics in English

ataikkalamae umathatimai naanae

aarpparippaenae akamakilnthae

karththar neer seytha nanmaikalaiyae

niththam niththam naan ninaippaenae

alavatta anpinaal annaippavarae

ennnatta nanmaiyaal niraippavarae

maasillaatha naesarae makimai pirathaapaa

paasaththaal umpaatham pattiduvaenae – aa

karththarae um seykaikal periyavaikalae

suththarae um seyalkal makaththuvamaanathae

niththiyarae um niyaayangal entum nirkumae

paktharin paerinpa paakkiyamathae – aa

ennai entum pothiththu nadaththupavarae

kannnnai vaiththu aalosanai sollupavarae

nadakkum valithanai kaattupavarae

nampi vanthoraik kirupai soolnthu kolluthae – aa

karam patti nadaththum karththar neerallo

kooppitta ennaik kunamaakkineerallo

kuliyil vilaathapati kaaththuk konnteerae

alukaiyai kalippaaka maatti vittirae – aa

PowerPoint Presentation Slides for the song Adaikalame Umathadiai Naane

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites