தமிழ்

Aethaenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம்

1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தியுள்ளோர்
மணமும் தூய்மையாம்
மூவர் ப்ரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

3. ஆதாமுக்கு ஏவாளை
அளித்த தந்தையே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
அளிக்க வாருமே

4. இரு தன்மையுஞ் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர் இருவரையும்
இணக்க வாருமே

5. மெய்மண வாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

6. நீரும் இந்நாளில் வந்து
இவ்விருவர் மீதும்
உம் செட்டையை விரித்து
மெய்பாக்கியம் ஈந்திடும்

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்று காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்

Aethaenil Aathi Manam Lyrics in English

1. aethaenil aathi manam
unndaana naalilae
pirantha aaseervaatham
maaraathirukkumae

2. ippothum pakthiyullor
manamum thooymaiyaam
moovar prasannamaavaar
mummurai vaalththunndaam

3. aathaamukku aevaalai
aliththa thanthaiyae
immaappillaikkip pennnnai
alikka vaarumae

4. iru thanmaiyunj serntha
kanniyin mainthanae
ivar iruvaraiyum
inakka vaarumae

5. meymana vaalanaana
theyva kumaararkkae
sapaiyaam manaiyaalai
jotikkum aaviyae

6. neerum innaalil vanthu
ivviruvar meethum
um settaைyai viriththu
meypaakkiyam eenthidum

7. kiristhuvin paariyotae
elumpum varaikkum
eththeengil nintu kaaththu
paer vaalvu eenthidum

PowerPoint Presentation Slides for the song Aethaenil Aathi Manam

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites