Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alakaay Nirkum Yaar Ivarkal - அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய்

2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்

5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று — அழகாய்

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை — அழகாய்

7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்

Alakaay Nirkum Yaar Ivarkal Lyrics in English

Alakaay nirkum yaar ivarkal? Thiralaay nirkum yaar ivarkal? Senaith thalaivaraam Yesuvin pottalaththil alakaay nirkum yaar ivarkal? 1. Oru thaalantho iranndu thaalantho ainthu thaalantho upayokiththor sirithaanatho perithaanatho petta panni seythu mutiththor — alakaay 2. Kaadu maedu kadanthu sentu Karththar anpaip pakirnthavarkal uyarvinilum thaalvinilum ookkamaaka jepiththavarkal — alakaay 3. Thanimaiyilum varaுmaiyilum laasaru pontu nintavarkal yaasiththaalum poshiththaalum visuvaasaththaik kaaththavarkal — alakaay 4. Ellaa jaathiyaar ellaak koththiram ellaa moliyum paesum makkalaam siluvaiyin geel Yesu iraththaththaal seer poraattam seythu mutiththor — alakaay 5. Vellai angiyaith thariththukkonndu vellaik kuruththaam olai pitiththu aarpparippaar singaasanam munpu aattukkuttikkae makimaiyentu — alakaay 6. Ini ivarkal pasi ataiyaar ini ivarkal thaakamataiyaar veyilaakilum analaakilum vaethanaiyai alippathillai — alakaay 7. Aattukkuttikku thaan ivar kannnneerai ara akattith thutaiththiduvaar alaiththuch selvaar inpa oottaுkkae allip paruka Yesu thaamae — alakaay

PowerPoint Presentation Slides for the song Alakaay Nirkum Yaar Ivarkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alakaay Nirkum Yaar Ivarkal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்? PPT
Alakaay Nirkum Yaar Ivarkal PPT

அழகாய் இவர்கள் நிற்கும் தாலந்தோ செய்து முடித்தோர் எல்லா இயேசு இனி திரளாய் சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் இவர்கள் இரண்டு ஐந்து உபயோகித்தோர் தமிழ்