1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!
2.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.
3.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;
வெண் ஆடை தூதன் செல்லுவான்;
நாதர் கலிலேயா செல்வார்,
4.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம் உமக்கே!
5.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.
6.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
வா, தோமா, என் விலாவைப் பார்;
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.
7.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.
8.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
காணாமல் நம்பின பாக்கியர்;
மாறா விஷ்வாசம் வைப்பவர்
அமர வாழ்வு பெறுவர்.
9.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் தோத்ரம் படைப்போம்;
பரனைப்போற்றி மகிழ்வோம், அல்லேலூயா!
Allelujah Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Lyrics in English
1.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, innaalil saavai ventoraam vinnmaatchi vaenthar pottaுvom. Alleluya! 2.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, anjnjaayiraு athikaalai nal maathar moovar kallarai sentarae kaana thaekaththai. 3.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, ammoovar paarththaar thoothanthaan; venn aatai thoothan selluvaan; naathar kalilaeyaa selvaar, 4.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, payantha seeshar raavilae kanndaar kaettar tham naatharae! En samaathaanam umakkae! 5.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, uyirththa naathar kanntoomae entoraith thomaa kaettanae; nampaan, santhaekangaொnndaanae. 6.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, vaa, thomaa, en vilaavaip paar; itho, en kaikal kaalkal paar; nampu, santhaekam theer enpaar. 7.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, thomaa santhaekam theernthanan; vilaa, kai, kaalkal Nnokkinan; en naathaa! Svaami! Entanan. 8.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, kaannaamal nampina paakkiyar; maaraa vishvaasam vaippavar amara vaalvu peraுvar. 9.Alleluya! Alleluya! Alleluya! Aa, maantharae, naam paaduvom, maa thooyathaam innaalil naam nam paadal thothram pataippom; paranaippotti makilvom, Alleluya!
PowerPoint Presentation Slides for the song Allelujah Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allelujah Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே PPT
Allelujah Aa Maantharae PPT

