Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbir Sirantha Kristhaiyaney - அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே

அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!

இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே!

சரணங்கள்

1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்

துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!

சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,

சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே

பரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற்

2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே

என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;

உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!

வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!

அரும் போதனே! என தரணே – அன்பிற்

3. தேற்றரவாள னெனில் தினம் வசிப்பாரே?

ஆற்றல் செய் தெந்தனை அணைத்துக்கொள்வாரே!

போற்ற என் னகம் தேவ வீடாக்குவாரே!

புண்ய மிது எனது புகழ்ச்சி! மன மகிழ்ச்சி!

இல்லை இகழ்ச்சி! இதென் சாட்சி! – அன்பிற்

4. தேவ ராஜ்ய மெந்தன் சொந்தமதாமே!

பாவி எனக்கு வந்த மா பங்குதாமே!

ஜீவ நாதனோ டங்கு சுகித்திருப்பேனே!

ஆவலா யங்கு வர நானே! அருள் கோனே!

என் சீமானே! நீ தானே! – அன்பிற்

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir Sirantha Kristhaiyaney Lyrics in English

Anpir sirantha kiris thaiyanae!

Yesu meyyanae! Maa thooyanae – thiruchchuthanae!

Saranangal

1. Unnaaviyin palaththaal ennai nirappumaen

Thunmaarkkan mananthanaith thooyathaa yaakkumaen!

Sanmaarkkaththodun anpai naanperach seyyumaen,

Saththiyam niraintha thaeva mainthanae, enthan karththanae

Parisuththanae! Ena thaththanae! – anpir

2. Mannip patainthaay enta maa thonithaanae

Ennakanthanil kaetka inpangaொnntaenae;

Un pathikkena enthan ullam thanthaenae!

Vanthennai yaalu menthan paranae! Thaeva suthanae!

Arum pothanae! Ena tharannee – anpir

3. Thaettaravaala nenil thinam vasippaarae?

Aattal sey thenthanai annaiththukkolvaarae!

Potta en nakam thaeva veedaakkuvaarae!

Punnya mithu enathu pukalchchi! Mana makilchchi!

Illai ikalchchi! Ithen saatchi! – anpir

4. Thaeva raajya menthan sonthamathaamae!

Paavi enakku vantha maa panguthaamae!

Jeeva naathano dangu sukiththiruppaenae!

Aavalaa yangu vara naanae! Arul konae!

En seemaanae! Nee thaanae! – anpir

PowerPoint Presentation Slides for the song அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir Sirantha Kristhaiyaney

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbir Sirantha Kristhaiyaney – அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே PPT
Anbir Sirantha Kristhaiyaney PPT

அன்பிற் தேவ மா எந்தன் மெந்தன் சிறந்த கிறிஸ் தையனே இயேசு மெய்யனே தூயனே திருச்சுதனே சரணங்கள் உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன் துன்மார்க்கன் மனந்தனைத் தமிழ்