1.அன்புருவாம் எம் ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.
2.வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.
3.அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.
4.சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.
5.திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.
6.எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.
Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா Lyrics in English
1.anpuruvaam em aanndavaa, em Jebam kaelum, naayakaa; naangal um raajjiyam aanndaanndum paangudan katta arulum. 2.vaalipaththil um nukamae vaaymai valuvaay aettaுmae, vaalkkai neriyaam saththiyam naatta arulveer niththiyam. 3.allum pakalum aasaiyae adakki aanndu, umakkae; pataikka emmaip pakthiyaay paluthaeyatta paliyaay. 4.suya thirupthi naadaathae, um theerppai muttaுm naadavae; vaenndaam pirar payam thayai, veeramaayp pin selvom ummai. 5.thidanattaோraith thaangida, thukkippavarai aattida; vaakkaal manaththaal yaaraiyum varuththaa palam eenthidum. 6.elithaam vaalkkai aengida, theengatta inpam thaetida, mannikka muttaுm theemaiyai naesikka manu jaathiyai.
PowerPoint Presentation Slides for the song Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா PPT
Anburuuvaam Em Aandava PPT

