Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arasanai Kaanamaliruppomo Namadhu - அரசனைக் காணமலிருப்போமோ? நமது

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

சரணங்கள்

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத — அரசனை

4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத — அரசனை

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத — அரசனை

Arasanai Kaanamaliruppomo Namadhu Lyrics in English

Arasanaik kaanamaliruppomo? – namathu
Aayulai veennaakak kalippomo?

Anupallavi

Paramparai njaanaththaip palippomo? – yoothar
Paadanu pavangalai olippomo? – yootha

Saranangal

1. Yaakkopilor velli uthikkumente, – israel
Raaja sengaோlengum kathikkumente,
Aakkamilanthu maraுvaakkuraiththa paalaam
Theerkkan molipoyyaatha paakkiyamae! – yootha — arasanai

2. Thaeso mayaththaarakai thontuthu paar! – maerkuth
Thisai vali kaattimun selluthu paar!
Poosanaik kaana nankotaikal konntae -avar
Ponnati vananguvom, nadavuminte! – yootha — arasanai

3. Alangaaramanai yontu thonuthu paar! – athan
Alaku manamung kannnum kavarnthathu paar!
Ilavara sangirukkum nichchayam paar! – naam
Eduththa karumam siththiyaakidum paar! – yootha — arasanai

4. Aramanaiyil avaraik kaannomae! – athai
Akantu thenmaarkkamaayth thirumpuvamae!
Maraintha udu atho! Paar thirumpinathae, – pethlaem
Vaasalil namaik konndu serkkuthu paar! – yootha — arasanai

5. Pon thoopavarkkam vellaip polamittaே, – raayar
Porkalal archchanai purivomae!
Vankannnan aerothaip paaraamal, – thaeva
Vaakkinaal thirumpinom soraamal, – yootha — arasanai

PowerPoint Presentation Slides for the song Arasanai Kaanamaliruppomo Namadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arasanai Kaanamaliruppomo Namadhu – அரசனைக் காணமலிருப்போமோ? நமது PPT
Arasanai Kaanamaliruppomo Namadhu PPT

பார் யூத அரசனை அரசனைக் காணமலிருப்போமோ நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ சரணங்கள் யாக்கோபிலோர் தமிழ்