1. அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.
2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.
3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.
4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.
5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.
6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.
அருள்நாதா நம்பிவந்தேன்- Arul Naatha Nambi Vanthean Lyrics in English
1. Arulnaathaa nampivanthaen, Nnokkakkadaveer. Kaimaarinti ennai muttaுm rakshippeer. 2. Thanjam vaennti nampi vanthaen thirup paathaththil; paava mannipparulveer in naeraththil. 3. Thooymai vaennti nampi vanthaen unthan aaviyaal; suththiseyveer maasillaatha raththaththaal. 4. Thunnai vaennti nampi vanthaen, paathai kaattuveer; thirupthi seythu niththam nanmai nalkuveer. 5. Sakthi vaennti nampi vanthaen, njaanam pelanum; akni naavum valla vaakkum eenthidum. 6. Yesu naathaa, nampi vanthaen, thavaraamalae ennai entum thaangi nintu kaarumae.
PowerPoint Presentation Slides for the song அருள்நாதா நம்பிவந்தேன்- Arul Naatha Nambi Vanthean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Naatha Nambi Vanthean – அருள்நாதா நம்பிவந்தேன்- PPT
Arul Naatha Nambi Vanthean PPT

