தமிழ்

Asattai Pannaadhae - அசட்டை பண்ணாதே அவித்து விடாதே

அசட்டை பண்ணாதே அவித்து விடாதே
ஆவியானவர் உனக்குள்ளே

அனல்மூட்டு; எரியவிடு
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ

எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ

ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை
அனுதினம் நீ பேசினால்
வல்லமை வெளிப்படும்
வரங்கள் செயல்படும்

அசட்டை பண்ணாதே அசதியாயிராதே

திருவசனம் நீ தினம் தினம் வாசி
சப்தமாய் அறிக்கையிடு
பெருகிடும் உன் ஊற்று
அது நதியாய் பாய்ந்திடும்

வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்
வேகமாய் வருவார்கள்
உன் கண்கள் அதைக் காணும்
உன் இதயம் அகமகிழும்

நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்
நாள்தோறும் நீ பாடினால்
கட்டுக்கள் உடைந்திடும்
கதவுகள் திறந்திடும்

கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள்
பலிபீடத்தில் ஏறும்
மகிமையின் தேவாலயம்
மகிமைப்படுத்துவேன்

சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
தேசமாய் மாறிடுவான்
துரிதமாய் செய்திடுவார்
ஏற்றகாலத்திலே – கர்த்தர்

Asattai pannaadhae Lyrics in English

asattaை pannnnaathae aviththu vidaathae
aaviyaanavar unakkullae

analmoottu; eriyavidu
karththar makimai unmael uthiththathu
kaarirul maththiyil niththiya velichcham nee

elunthu oliveesu niththiya velichcham nee

aaviyil nirainthu anniya paashai
anuthinam nee paesinaal
vallamai velippadum
varangal seyalpadum

asattaை pannnnaathae asathiyaayiraathae

thiruvasanam nee thinam thinam vaasi
sapthamaay arikkaiyidu
perukidum un oottu
athu nathiyaay paaynthidum

velichcham thaeti athikaarak koottam
vaekamaay varuvaarkal
un kannkal athaik kaanum
un ithayam akamakilum

nantippaadal sthoththira geetham
naalthorum nee paatinaal
kattukkal utainthidum
kathavukal thiranthidum

kaethaarin aadukal nepaayoththin kadaakkal
palipeedaththil aerum
makimaiyin thaevaalayam
makimaippaduththuvaen

sinnavan aayiram siriyavan palaththa
thaesamaay maariduvaan
thurithamaay seythiduvaar
aettakaalaththilae – karththar

PowerPoint Presentation Slides for the song Asattai pannaadhae

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites