Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pethlakaem Oororam Saththiraththai Naati - பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து

எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

Bethalagem Oororam – Pethlakaem Oororam Saththiraththai Naati Lyrics in English

pethlakaem oororam saththiraththai naati
karththan Yesu paalanukku thuththiyangal paati
pakthiyudan iththinam vaa oti

kaalam niraivaerina pothisthiriyin viththu
seela kanni karppaththil aaviyaal urpaviththup
paalanaana Yesu namin soththu

ellaiyillaa njaanaparan vellaimalaiyoram
pullanaiyilae piranthaar illamengumeeram
thollai mikum avviruttu naeram

vaan puvi vaal raajanukku maattakanthaan veetoo
vaanavarkku vaayththa meththai vaatina pulpoonntoo
eenak kolamithu vinthaiyallo

antharaththil paadukintar thoothar senai kooti
manthai aayar odukintar paadal kaetkath thaeti
intiravil enna intha moti

aattitaiyar anjukintar avar makimai kanndu
attiyinti kaapiriyael sonna seythi konndu
naattamudan ratchakaraik kanndu

inthiriyudu kanndarasar moovar nadanthaarae
santhirath thoopap polam vaiththuch suthanaip panninthaarae
vinthaiyathu paarkkalaam vaa naerae

PowerPoint Presentation Slides for the song Bethalagem Oororam – Pethlakaem Oororam Saththiraththai Naati

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pethlakaem Oororam Saththiraththai Naati – பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி PPT
Pethlakaem Oororam Saththiraththai Naati PPT

இயேசு வா கண்டு பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி கர்த்தன் பாலனுக்கு துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் ஓடி காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீல தமிழ்