பல்லவி
தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை
செய்வாய், எமது கோவே!
சரணங்கள்
1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள்
முன்னவா, சத்ய வேதா!
பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு
புண்ணியனே, மா நீதா!-இங்கு
நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை
பண்ணுவாய், வினோதா!
மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது,
ஜீவனே, யேசு கோனே,-ஏழைப்
பாவிகள் மீட்பன் தானே. – தேவா
2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி
மேன்மையுடன் சிநேகம்
அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.-என்றும்
அத்தனோ டுற வாக,-ஜெப
துந்துமிகள் முழங்க,-ஐக்யம்
பந்தமுடன் இலங்க,
தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்
சொந்தமுடன் ஈவாயே,-இவர்
சந்ததம் வாழ நீயே. – தேவா
3. இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே,-பரன்
இஷ்டப்படி நடந்தே,
அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,-இவர்
அனுதினமும் மகிழ்ந்தே,-உயர்
அம்பர வீட்டில் சேர்ந்து,-மிகு
கெம்பீரமாக வாழ்ந்து,
புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
இங்கிதமாய்க் கொண்டாட,-நிதம்
மங்களக் கவி பாட. – தேவா
Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து Lyrics in English
Pallavi
Thaevaa, ivveettil inte maevi elunthu varavae;-thayai
Seyvaay, emathu kovae!
Saranangal
1. Moovar oruvaraana thaevaa;-Kristhunaathaa,-engal
Munnavaa, sathya vaethaa!
Poovil emakkuthavi yaarumillai, em thaathaa,-yaesu
Punnnniyanae, maa neethaa!-ingu
Nannnuvaay, meyp pothaa;-thayai
Pannnuvaay, vinothaa!
Maevi unatharulai eevaay ivveettin meethu,
Jeevanae, yaesu konae,-aelaip
Paavikal meetpan thaanae. – thaevaa
2. Vinthaiyudan kalippum santhamudan unndaaka,-athi
Maenmaiyudan sinaekam
Anthamudan peruki enthap paavamum aeka.-entum
Aththano dura vaaka,-jepa
Thunthumikal mulanga,-aikyam
Panthamudan ilanga,
Thanthaip paranae, intu untan arul niraivaaych
Sonthamudan eevaayae,-ivar
Santhatham vaala neeyae. – thaevaa
3. Ingu vasikkum mattum thungan molik kisainthae,-paran
Ishdappati nadanthae,
Angam, manathu yaavum pangamintith thodarnthae,-ivar
Anuthinamum makilnthae,-uyar
Ampara veettil sernthu,-miku
Kempeeramaaka vaalnthu,
Pungamudan nithamum thangi yaesu paranil
Ingithamaayk konndaada,-nitham
Mangalak kavi paada. – thaevaa
PowerPoint Presentation Slides for the song Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து PPT
Deva Evveettil Intrae Meavi PPT

