Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Sayal Aaha Maari - தேவ சாயல் ஆகா மாறி

பல்லவி

தேவ சாயல் ஆகா மாறி
தேவனோடிருப்பேன் நானும்

சரணங்கள்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே – தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலையல்லாத பொன்வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ

4. ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ

7. உன்னத சீயோன் மலைமேல்
என் அருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினி லகமகிழ்ந்திடுவேன் நான்
ஜீவிப்பேனே நீடுழிவாய் – தேவ

தேவ சாயல் ஆகா மாறி -Deva Sayal Aaha Maari Lyrics in English

pallavi

thaeva saayal aakaa maari
thaevanotiruppaen naanum

saranangal

1. antha naalum nerungiduthae
athi viraivaay niraivaeruthae
mannnnin saayalai naan kalainthae – tham
vinnnavar saayal ataivaen – thaeva

2. poomiyin koodaaram entum
pelaveenamae alinthidumae
kaivaelaiyallaatha ponveedu
kanndatainthu vaalnthiduvaen – thaeva

3. sorum ullaana manithan
sothanaiyil pelanataiya
aatti thaettidum thaettaravaalan
aanndavar ennotiruppaar – thaeva

4. aaviyin achchaாra meenthaar
aayaththamaay sernthidavae
jeevanae enathu kiristhaesu
saavu enthan aathaayamae – thaeva

5. kaaththirunthu jepippathinaal
kalukupola paranthelumpi
jeeva yaaththirai oti mutiththu
jeeva kireedam pettiduvaen – thaeva

6. moontil ontay jolippavarai
mukamukamaay tharisiththida
vaanjaiyaay thavikkum enathullam
vaarum entu kooppiduthae – thaeva

7. unnatha seeyon malaimael
en arumai Yesuvudan
jepa veettini lakamakilnthiduvaen naan
jeevippaenae needulivaay – thaeva

PowerPoint Presentation Slides for the song தேவ சாயல் ஆகா மாறி -Deva Sayal Aaha Maari

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Sayal Aaha Maari – தேவ சாயல் ஆகா மாறி PPT
Deva Sayal Aaha Maari PPT

தேவ சாயல் ஜீவ பல்லவி ஆகா மாறி தேவனோடிருப்பேன் நானும் சரணங்கள் நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை களைந்தே தம் விண்ணவர் தமிழ்