Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Kirupai Unakku Pothum - என் கிருபை உனக்கு போதும்

என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் – சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் – நான்

1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் – (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்பதில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை

2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயும் இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயும் விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் – (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு

En Kirupai Unakku Pothum Lyrics in English

En kirupai unakku pothum intha mannnnil vaeraு enna vaenndum – sol orupothum unnai maravaen un nilalaip pola unnai thodarvaen – naan 1. Amaithi thottamaaka naanum ulakai unakku koduththaen jaathi pookkal valarththaay neeyum yuththam naalum thoduththaay kannnneerukkum senneerukkum unnai nee adaku vaiththaay – (2) siluvaiyin vali meetpu enten sinthaiyil nee aerpathillai viluthukal entu naan ninaiththa manitharkal ennai saarnthathillai enna nadanthaalum jepippathillai ennai nee ninaippathillai 2. Oliyai aetti vaiththaen neeyum irulai thaetich sentay valiyai thiranthu vaiththaen neeyum vilikal mootikkonndaay en raajjiyam engae entu mannnnil nee thaedukintay – (2) thanthaikku naan geelppatinthaen ninthaikalai aettaுkkonntaen entaikkumae aatchi seyvaen neethiyai nilai naattach seyvaen ponathu pokattum maranthuvidu intodu maarividu

PowerPoint Presentation Slides for the song En Kirupai Unakku Pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kirupai Unakku Pothum – என் கிருபை உனக்கு போதும் PPT
En Kirupai Unakku Pothum PPT

உன்னை நீயும் உனக்கு மண்ணில் என்னை வைத்தேன் செய்வேன் கிருபை போதும் சொல் ஒருபோதும் மறவேன் நிழலைப் தொடர்வேன் அமைதி தோட்டமாக நானும் உலகை தமிழ்