Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyanae Umathu Thiruvadigaalukku - ஐயனே! உமது திருவடி களுக்கே

1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம் !
மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்?

2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்ந்தர வணைத்தீரே:
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே .

3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்.

4. நாவிழி செவியை நாதனே, இந்த
நாளெல்லாம் நீர் காரும்.
தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
தெய்வமே , அருள் கூரும் .

5.கைகாலால் நான் பவம் புரியாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே , உம்மால் தான் எனதிதயம்
தூய் வழியே செல்லும்.

6. ஊழியந் தனை நான் உண்மையாய்ச் செய்ய
உதவி நீர் செய்வீரே .
ஏழை நான் உமக்கே இசையானால் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே.

7. அத்தனே ! உமது மகிமையை நோக்க
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும், மெய் விசுவாசம்
தேவனே உமக் கேற்க.

8. இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலம் தாரும் , என் நாளைப்
பூவுலகில் கடத்த

9. இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்
தந்தையே , நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந் தாரும்

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே Lyrics in English

1.aiyanae ! Umathu thiruvati kalukkae aayirantharan thoththiram ! Meyyanae ! Umathu thayaikalai atiyaen vivarikka emmaaththiram? 2. Sentathaam iravil thaevareerennaich sernthara vannaiththeerae: anthataivaayip pakalilung kirupai yaakavaa tharippeerae . 3.iruthayan thanai neer puthiyathae yaakkum aelaiyaik kunamaakkum karunnaiyaay ennai umathakamaakkik kanmamellaam pokkum. 4. Naavili seviyai naathanae, intha naalellaam neer kaarum. Theevinai vilaki naan thirumukam Nnokka theyvamae , arul koorum . 5.kaikaalaal naan pavam puriyaamal suththanae thunnai nillum thuyyanae , ummaal thaan enathithayam thooy valiyae sellum. 6. Ooliyan thanai naan unnmaiyaaych seyya uthavi neer seyveerae . Aelai naan umakkae isaiyaanaal aavi inpamaayp peyveerae. 7. Aththanae ! Umathu makimaiyai Nnokka ayalaan nalam paarkkach siththamaay arulum, mey visuvaasam thaevanae umak kaerka. 8. Intum enmeetpaip payam nadukkaththo taeyatiyaen nadaththap pontidaa palam thaarum , en naalaip poovulakil kadaththa 9. Intha naalilumae thiruchSabai valara aekaa thayaikoorum thanthaiyae , naanathar kuthaviyaayirukkath tharparaa varan thaarum

PowerPoint Presentation Slides for the song Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே PPT
Iyanae Umathu Thiruvadigaalukku PPT

உமது நீர் தனை நோக்க தாரும் ஐயனே திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் மெய்யனே தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம் சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர தமிழ்