1. ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்
பல்லவி
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம் – அல்லேலூயா
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
2. அந்த வான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய்
3. நம் பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம். – இன்பராய்
4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய்
5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் – இன்பராய்
6. அங்கே நம் இரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார். – இன்பராய்
7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடிசூடுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் – இன்பராய்
8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய்
9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் – இன்பராய்
ஜோதி தோன்றும் ஒர் – Jothi Thontrum Oor Lyrics in English
1. Jothi thontum or thaesamunndu
Visuvaasak kannnnaal kaannkirom
Nampithaa alaikkumpoluthu
Naamangae vasikkach selluvom
Pallavi
Inparaay eettilae
Motchakaraiyil naam santhippom – Alleluya
Inparaay eettilae
Motchakaraiyil naam santhippom
2. Antha vaan karaiyil naam nintu
Vinnnnor geethangalaip paaduvom
Thukkam yaavum attaு makilnthu
Suththaril aaraுthal ataivom – inparaay
3. Nam pithaavin anpai ninaiththu
Avaril makilnthu poorippom
Meetpin nanmaikalai unarnthu
Avarai vanangith thuthippom. – inparaay
4. Antha motchakaraiyatainthu
Vaanasenaiyudan kalippom
Nam thollai yaaththirai mutiththu
Vinn kireedaththai naam tharippom – inparaay
5. Saavattaோr poorikkum thaesaththil
Santhippom aaduvom paaduvom
Thukkam Nnovalintha sthalaththil
Semamaay naam ilaippaaraுvom – inparaay
6. Angae nam iratchakar ententum
Aalukai seythu veettiruppaar
Thukkam Nnoy saavukal neengidum
Dhevan nam kannnneeraith thutaippaar. – inparaay
7. Thoothar soolnthu nintu paaduvor
Kaettu naam yaavarum makilvom
Pakthar angae mutisooduvaar
Or muti angunndu enakkum – inparaay
8. En uttaாr poyvittar mun angae
Aayinum naan meelavum santhippaen
Avar koottaththil naan vinnnnilae
Oppatta paerinpam kolluvaen – inparaay
9. Aelaikkum maalikai angunndu
Entu nal meetpar alaikkiraar
Maanthar yaavarukkum idamunndu
Ellorum vaarungal enkiraar – inparaay
PowerPoint Presentation Slides for the song ஜோதி தோன்றும் ஒர் – Jothi Thontrum Oor
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jothi Thontrum Oor – ஜோதி தோன்றும் ஒர் PPT
Jothi Thontrum Oor PPT

