Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalikooruvom, Karththar Nam Patchamae - 1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்.
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்;
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,
அவரே திடன் ஆகையால்.
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

3. வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும், இது மெய் மெய்யே.
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

4. நிலைத்திருப்போம் , கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம்;
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

Kalikooruvom, Karththar Nam Patchamae Lyrics in English

1. Kalikooruvom, Karththar nam patchamae; tham raththaththaal nammai meettar; avar namakku yaavilum ellaamae eppaavam payam neekkuvaar. Karththar nam patcham, Karththar nammodu, Karththar sakaayar yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor? 2. Thidanataivom, theemai maerkolluvom karththaavin valla karaththaal; unnmai pakthiyaay naatooraுm jeevippom, avarae thidan aakaiyaal. Yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor? 3. Vaakkai nampuvom, uraுthi moliyaay Kristhuvil aam aamaen ente; poomi olinthum entum uraுthiyaay nilaikkum, ithu mey meyyae. Yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor? 4. Nilaiththiruppom , karththarin kattinil, athaal niththiya jeevan unndaam; pattaுm aelaiyaith tham valla karaththil vaiththentum paathukaappaaraam yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor?

PowerPoint Presentation Slides for the song Kalikooruvom, Karththar Nam Patchamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalikooruvom, Karththar Nam Patchamae – 1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே; PPT
Kalikooruvom, Karththar Nam Patchamae PPT

வல்லோர் எதிர்க்க கர்த்தர் நம் தம் வல்ல களிகூருவோம் பட்சமே ரத்தத்தால் நம்மை மீட்டார் நமக்கு யாவிலும் எல்லாமே எப்பாவம் பயம் நீக்குவார் பட்சம் தமிழ்