கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ.
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ. – கிஞ்சிதமும்
1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், – நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம். – கிஞ்சிதமும்
2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? – நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெ வ்வேறு
விண்டுரைக்கில் பெருகும்@ தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம்.– கிஞ்சிதமும
3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் – அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ. – கிஞ்சிதமும்
Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla Lyrics in English
Kinjithamum nenjae, anjidaathae – nalla
Kaedakaththaip piti nee – visuvaasak
Kaedakaththaip piti nee.
Vanjanaiyaakavae paey ethirththuntanai
Vannik kannaithoduth theykinta vaelaiyil,
Nenjil padaamal thadukka athu nalla
Nichchayamaana parisai arinthu nee. – kinjithamum
1. Paavaththai veraுkka, aapaththaich sakikka,
Paththiyil thelikkavum, – nithya
Jeevanaip pitikka, lokaththai jeyikka,
Thiramai alikkavum,
Saavae un koor engae? Paathaalamae, un
Jeyam engae? Entu nee koovik kalikkavum,
Dhevan ukanthunaith thaan angaீkarikka,
Seyyavumae athu thivya nal aayutham. – kinjithamum
2. Panntaiyar anthap parisaiyinaal allo,
Kanndatainthaar paeraு? – nalla
Thonndan aapael muthalaana vaitheekaraith
Thokuththu ve vvaeraு
Vinnduraikkil perukum@ thee annaiththathum,
Veeriya singaththin vaayai ataiththathum,
Kanntithamaay vetti konndathu maampala
Kaariyangalaiyum paar ithu maa jeyam.- kinjithamuma
3. Oottamudan ipparisaip pitiththida
Un seyal maa paetham – athin
Thottamum mutivum aesuparan seyal,
Thunnai avar paatham
Aettara vannaikkavae pannivaaka
Iranthu mantati avar moolamaakavae,
Aattal sey thaettaravaali Parisuththa
Aavi uthaviyai maevi, atainthu, nee. – kinjithamum
PowerPoint Presentation Slides for the song Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kignsithamum Nenjaee – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே நல்ல PPT
Kignsithamum Nenjaee PPT

