Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae - குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்யுமே

வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

இறைவனே இறைவனே இணையில்லாதவனே
குறை நிறைந்த என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

விலைபோகாத பாத்திரம் நான்
விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே

தடைகள் யாவும் நீக்கி என்னைத்தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே

மேய்ப்பனே மேய்ப்பனே மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத்
தேடிவந்த தெய்வமே

வாழ்நாளெல்லாம் உம் பாதம்
செல்லும் பாதையில் நடத்திடுமே

Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae Lyrics in English

kuyavanae, kuyavanae pataippin kaarananae
kalimannnnaana ennaiyumae kannnnokki paarththidumae

verumaiyaana paaththiram naan
veruththu thallaamalae
nirampi valiyum paaththiramaay
vilangach seyyumae

vaethaththil kaanum paaththiram ellaam
Yesuvai pottiduthae
ennaiyum avvitha paaththiramaay vanainthu kollumae

iraivanae iraivanae innaiyillaathavanae
kurai niraintha ennaiyumae kannnnokki paarththidumae

vilaipokaatha paaththiram naan
virumpuvaar illaiyae
vilaiyillaa um kirupaiyaal ukanthathaakkidumae

thataikal yaavum neekki ennaiththammaippol maattidumae
utaiththu ennai unthanukkae udamaiyaakkidumae

maeyppanae maeyppanae manthaiyai kaappavanae
maarkkam akanta ennaiyumae kannnnokki paarththidumae

mannnnaasaiyil naan mayangiyae
meyvali vittakanten
kannpona pokkai pinpattiyae kanntaen illai inpamae
kaannaamal pona paaththiram ennaith
thaetivantha theyvamae

vaalnaalellaam um paatham
sellum paathaiyil nadaththidumae

பாத்திரம் என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே குயவனே இறைவனே உம் மேய்ப்பனே படைப்பின் காரணனேகளிமண்ணான வெறுமையான வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் தமிழ்