Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maamanokarah Ivvaalayam - மாமனோகரா இவ்வாலயம்

பல்லவி

மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,
மாமனோகரா! பராபரா!

சரணங்கள்

1. பூமியாளும் நாதனே, நரர்
போகம் நாடும் நீதனே!
நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்
தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா

2. நாதனே, இவ்வாலயத்தை
நலமாய்த் தந்தாய் தாசர்க்கே;
பாதம் போற்றி வாழ்த்துவோம்; குரு
பரனே, பராபரா, தினம். – மா

3. நின் திருத்தயை பொறுமை
நின் திரு மகிமையும்
சந்தமாய் நிறைந்திட இதில்
சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா

4. தோத்திரம் ஜெபம் தியானம்,
தூய்மையாம் பிரசங்கமும்,
பார்த்திபா இவ்வாலயத்தில்
பக்தியாகவே நடந்திட. – மா

5. நீதி ஞாயம் தெய்வபக்தி,
நேர்மைபேதத் தியானமும்
நாதனில் விசுவா சமும் மிஞ்சி
நன்கு போற்ற தாசர்க்கருள் புரி. – மா

Maamanokarah Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம் Lyrics in English

Pallavi

Maamanokaraa! Ivvaalayam-vantharul koorum,
Maamanokaraa! Paraaparaa!

Saranangal

1. Poomiyaalum naathanae, narar
Pokam naadum neethanae!
Naamae vaalththum thaasar naduvil
Thaamatham illaamal eluntharul! – maa

2. Naathanae, ivvaalayaththai
Nalamaayth thanthaay thaasarkkae;
Paatham potti vaalththuvom; kuru
Paranae, paraaparaa, thinam. – maa

3. Nin thiruththayai poraுmai
Nin thiru makimaiyum
Santhamaay nirainthida ithil
Santhatham eevaay nin aasiyai. – maa

4. Thoththiram Jebam thiyaanam,
Thooymaiyaam pirasangamum,
Paarththipaa ivvaalayaththil
Pakthiyaakavae nadanthida. – maa

5. Neethi njaayam theyvapakthi,
Naermaipaethath thiyaanamum
Naathanil visuvaa samum minji
Nanku potta thaasarkkarul puri. – maa

PowerPoint Presentation Slides for the song Maamanokarah Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maamanokarah Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம் PPT
Maamanokarah Ivvaalayam PPT

மா நின் மாமனோகரா பராபரா நாதனே பல்லவி இவ்வாலயம்வந்தருள் கூரும் சரணங்கள் பூமியாளும் நரர் போகம் நாடும் நீதனே நாமே வாழ்த்தும் தாசர் நடுவில் தாமதம் தமிழ்