Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetpar Yesu Kurusil Thonginaarae - மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

1. லோகப்பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக்குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் — மீட்பர்

2. இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில் — மீட்பர்

3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையே – அவர் — மீட்பர்

4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப்பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம் — மீட்பர்

5. பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி, நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ — மீட்பர்

6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல்மனமும் உருகிடுமே
மாயலோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும் — மீட்பர்

Meetpar Yesu Kurusil Thonginaarae Lyrics in English

Meetpar Yesu kurusil thonginaarae

Moontanni meethil kaayam atainthae

1. Lokappaavam theerkka paliyaana

Thaeva aattukkuttiyaanavar

Sonthamaana iraththam sinthi meettu

Inthalavaay anpu koornthavar emmil — meetpar

2. Yesuvae kalvaari siluvaiyil

Aeri jeevan thanthiraavitil

Aelaiyaan en paava paarangalai

Engu sentu theerththuk kolluvaen poovil — meetpar

3. Thaevanae ennai aen kai vittiro

Entu Yesu katharinaarae

Paavaththaal pithaavin mukaththaiyum

Paarkkavum mutiyavillaiyae – avar — meetpar

4. Annai, thanthai yaavarilum maelaay

Anpu koornthaar annnal Yesuvae

Aachchariya thaeva anpaippaada

Aayiram naavukal pothumo pathinaayiram — meetpar

5. Paava paaram lokak kavalaikal

Thaavi unnaich soolntha pothilum

Thaeti, naati oti vanthaal unnaith

Thaetti, aattith thaanguvaar avar – ippo — meetpar

6. Koramaam siluvaik kaatchi kanndaal

Kalmanamum urukidumae

Maayaloka aasai vanjikkumae

Maaridaatha Yesu pothumae – entum — meetpar

PowerPoint Presentation Slides for the song Meetpar Yesu Kurusil Thonginaarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Yesu Kurusil Thonginaarae – மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே PPT
Meetpar Yesu Kurusil Thonginaarae PPT

மீட்பர் இயேசு தேவ அன்பு இயேசுவே பாவ குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே லோகப்பாவம் தீர்க்க பலியான ஆட்டுக்குட்டியானவர் சொந்தமான இரத்தம் தமிழ்