நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய்பல நன்மைகட்காய்
நாள்தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா
நன்றியால் ஸ்தோத்தரிப்போம்
கடந்த வாழ்வில் கருத்துடனே
கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதை நடத்தினாரே
ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை அல்லேலூயா
ஜீவனின் அதிபதியை – நன்றியால்
அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள் தான் போதுமா
ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா
ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்
பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
பாச கரம் கொண்டு தூக்கினாரே
கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்
கருத்துடன் காத்தனரே அல்லேலூயா
கருத்துடன் காத்தனரே – நன்றியால்
பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
போர்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா
நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்
Nandriyaal Pongudhae Emadhullam Lyrics in English
Nantiyaal ponguthae emathullam
Naathan seypala nanmaikatkaay
Naalthoraுm nalamudan kaaththanarae
Nantiyaal sthoththarippom Alleluya
Nantiyaal sthoththarippom
Kadantha vaalvil karuththudanae
Kannmannipol nammaik kaaththanarae
Kannnneer kavalaiyinai maattinaarae
Kanivudan sthoththarippom Alleluya
Kanivudan sthoththarippom – nantiyaal
Jeevan sukam pelan yaavum thanthu
Jeeviya paathai nadaththinaarae
Jeeva kaalamellaam sthoththarippom
Jeevanin athipathiyai Alleluya
Jeevanin athipathiyai – nantiyaal
Arputha karam konndu nadaththinaarae
Athisayangal pala purinthanarae
Aayiram naavukal thaan pothumaa
Aanndavaraith thuthikka Alleluya
Aanndavaraith thuthikka – nantiyaal
Paava settil amilntha emmai
Paasa karam konndu thookkinaarae
Kan malaimael nammai niraுththi avar
Karuththudan kaaththanarae Alleluya
Karuththudan kaaththanarae – nantiyaal
Poruththanai palikal thinam seluththi
Porparan Yesuvai vaalththiduvom
Sthoththira paaththiran Yesuvaiyae
Naeththiramaay thuthippom Alleluya
Naeththiramaay thuthippom – nantiyaal
PowerPoint Presentation Slides for the song Nandriyaal Pongudhae Emadhullam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyaal Pongudhae Emadhullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் PPT
Nandriyaal Pongudhae Emadhullam PPT

