Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paareer Arunnothayam Pol - பாரீர் அருணோதயம் போல்

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்

1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதிமதிரம் — இயேசுவே

2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தாங்குகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே — இயேசுவே

3. என் பிரியமே ரூபவதி

என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் — இயேசுவே

4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினின் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நான் செல்வேன் அந்நேரமே — இயேசுவே

5. நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்தில்

Paareer Arunnothayam Pol Lyrics in English

Paareer arunnothayam pol uthiththu varum ivar yaaro mukam sooriyan pol pirakaasam saththam peruvella iraichchal polae Yesuvae aathma naesarae saaronin rojaavum leeli pushpamumaam pathinaayirangalil siranthor 1. Kaattu marangalil kichchili pol enthan naesar atho nirkiraar naamam oottaுnnda parimalamae inpam rasaththilum athimathiram — Yesuvae 2. Avar idathu kai en thalai geel valakkaraththaalae thaangukiraar avar naesaththaal sokamaanaen en mael parantha koti naesamae — Yesuvae 3. En piriyamae roopavathi ena alaiththidum inpa saththam kaettu avar pinnae odiduvaen avar samookaththil makilnthiduvaen — Yesuvae 4. En naesar ennutaiyavarae avar maarpinin saaynthiduvaen manavaaliyae vaa enpaarae naan selvaen annaeramae — Yesuvae 5. Naam makilnthu thuthiththiduvom aattukkuttiyin mana naalilae suththa pirakaasa aataiyotae paranthiduvom naam maekaththil

PowerPoint Presentation Slides for the song Paareer Arunnothayam Pol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paareer Arunnothayam Pol – பாரீர் அருணோதயம் போல் PPT
Paareer Arunnothayam Pol PPT

இயேசுவே சத்தம் நேசர் பாரீர் அருணோதயம் உதித்து யாரோ முகம் சூரியன் பிரகாசம் பெருவெள்ள இரைச்சல் போலே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி தமிழ்