பல்லவி
பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
பாதையிற், கோதையரே.
அனுபல்லவி
ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை
மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள்
சரணங்கள்
1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே,
புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே,
நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே,
நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள்
2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே,
பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே,
நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே,
நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே. – பாருங்கள்
3. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே,
செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே,
சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே,
ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. – பாருங்கள்
4. துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்,
துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்,
அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்,
அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார் – பாருங்கள்
Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள் Lyrics in English
Pallavi
Paarungal, thodarnthu vaarungal, kolkathaa
Paathaiyir, kothaiyarae.
Anupallavi
Aarung kaanavae aattuvaasal kadanthu malai
Maettil nadanthananthang kottikal padukintar – paarungal
Saranangal
1. Ponnaay oliru maeni mannnnaay matiyuthae,
Punga udalellaam puluthikal patiyuthae,
Nannaya malark kannkal kannnneerkal vatikkuthae,
Naavum asthiyum kaaynthu saavumae pitikkuthae. – paarungal
2. Paaviyaith thaeti vantha paathangal poriyuthae,
Patchaththinaal viriththa kaikalum neriyuthae,
Naapikkamalam pattik kopiththuk kariyuthae,
Nataiyu mutaiyun thoynthu sathaikalum sariyuthae. – paarungal
3. Thirumuka arul ontum theriyaathatainthathae,
Senguru thikalellaam pongi vatinthathae,
Saruva vallapam kuntiththiraiyum nirainthathae,
Jakamum paramun thukka saakaraththalunthuthae. – paarungal
4. Thunpa thurithaththilum anpaiyae polikintar,
Thuttarkal atharkaakath thittukal molikintar,
Anpaayp pilaikkath thamathaaviyaik kedukkintar,
Antho nasaraeththaiyar nonthati edukkintar – paarungal
PowerPoint Presentation Slides for the song Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள் PPT
Paarungal Thodarnthu Vaarungal PPT

