Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavikku Pukalidam Yesu Iratchakar - பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல் கொதா மலைக்கு இயேசுவை

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசி தாகமும்
படுகாயமும் அடைந்தாரே

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முள்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் காணும் உள்ளம் தாங்குமோ

4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா

5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா

6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பி வா

Paavikku Pukalidam Yesu Iratchakar Lyrics in English

Paavikku pukalidam Yesu iratchakar paarinil paliyaaka maanndaarae Parisuththarae paavamaanaarae paaramaana siluvai sumanthavarae 1. Kaattik koduththaan muppathu vellik kaasukkaakavae karththan Yesuvai kolai seyyavae konndu ponaarae kol kothaa malaikku Yesuvai 2. Kallar maththiyil oru kallan pol kuttamatta kiristhaesu thonginaar parikaasamum pasi thaakamum padukaayamum atainthaarae 3. Kaalkal kaikalil aanni paaynthida kireedam mulkalil pinni sootida iraththa vellaththil Karththar thonginaar ithaik kaanum ullam thaangumo 4. Ulakaththin iratchakar Yesuvae uyir koduththaar uyirththelunthaar thammai nampinaal unnaik kaividaar thalaraamal nampi oti vaa 5. Paava saapangal theeraa viyaathikal pala tholvikal unthan vaalkkaiyil kanndu nee manam kalanguvathaen karththan Yesuvanntai otivaa 6. Varuththappattu paaram sumapporae vaarungal ennanntaiyil enkiraar ilaippaaraுthal tharum Yesuvai intu thaeti naati nampi vaa

PowerPoint Presentation Slides for the song Paavikku Pukalidam Yesu Iratchakar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavikku Pukalidam Yesu Iratchakar – பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் PPT
Paavikku Pukalidam Yesu Iratchakar PPT

இயேசுவை இரட்சகர் கர்த்தன் தொங்கினார் நம்பி வா பாவிக்கு புகலிடம் இயேசு பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே காட்டிக் தமிழ்