Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirasannam Thaarum Thaevanae - தேவ சமூகம் இன்பமானது

தேவ சமூகம் இன்பமானது

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடிவந்தோம்

      

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

     

2. நீரல்லால் இந்தப் பாரில்
தஞ்சம் வேறோருவருமில்லை
உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்

    

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் தந்திடுமே

    

4. தேவனே உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

        

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம்

Pirasannam Thaarum Thaevanae Lyrics in English

Thaeva samookam inpamaanathu pirasannam thaarum thaevanae unthan samookam thaarumae Yesuvae unthan naamaththil innaeram naangal kootivanthom        1. Paktharkal pottaுm naathaa Parisuththa Dhevan neerae kaerupeenkal seraapeen thuthi paadidum paranae nin paatham pannikintom       2. Neerallaal inthap paaril thanjam vaeroruvarumillai unthanin samookaththaal ilaippaarida santhatham um arul eenthidum      3. Nalmaeyppar Yesu thaevaa thunpangal neekkidumae aathi anpu ennil kuntidaamal nilaikka nal arul thanthidumae      4. Thaevanae unthan samookam mun sella vaenndukiraேn paerinpam ennaalum pongidavae ummil makilnthu naan aananthippaen          5. Vaanaththil thontum naalil ummaip pol maaridavae aavi aathmaa thaekam maasattathaay kaaththida karththarae kenjukintom

PowerPoint Presentation Slides for the song Pirasannam Thaarum Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirasannam Thaarum Thaevanae – தேவ சமூகம் இன்பமானது PPT
Pirasannam Thaarum Thaevanae PPT

சமூகம் உந்தன் அருள் தேவ இன்பமானது பிரசன்னம் தாரும் தேவனேஉந்தன் தாருமேஇயேசுவே நாமத்தில்இந்நேரம் நாங்கள் கூடிவந்தோம் பக்தர்கள் போற்றும் நாதாபரிசுத்த தேவன் நீரேகேருபீன்கள் சேராபீன் துதி தமிழ்