Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka - இயேசு வருகிறார்

இயேசு வருகிறார்

பிரதான தூதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவார்
 
சாயங்காலத்திலோ நடுராவினிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயேசு வருவார்

          

1. இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர்

      

2. நோவா காலத்தின் சம்பவம்போல்
நடந்திடும் அந்த நாட்களிலே
புசித்தும் குடித்தும் பெண்கொண்டும்
பலர் அசந்து வெறித்திருப்பார்

    

3. லௌகிகக் கவலைகளினாலும்
இலட்சை மிகுந்த வெறியினாலும்
எம் இதயம் பாரமடையாமல்
எச்சரிக்கையுடன் காத்திருப்போம்

4. இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொருங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம்

    

5. தவிக்கும் உலகம் அந்த நாளில்
தலைகளை உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார்

Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka Lyrics in English

Yesu varukiraar pirathaana thoothan ekkaalam mulanga paraman Yesu varuvaar   saayangaalaththilo naduraavinilo seval koovidum naeraththilo athikaalaiyilo entha vaelaiyilo paraman Yesu varuvaar            1. Iruvar vayalil iruppaar iranndu sthirikal enthiram araippaar oruvar kaividappaduvaar aettaுkkollappaduvaar oruvar        2. Nnovaa kaalaththin sampavampol nadanthidum antha naatkalilae pusiththum kutiththum pennkonndum palar asanthu veriththiruppaar      3. Laukikak kavalaikalinaalum ilatchaை mikuntha veriyinaalum em ithayam paaramataiyaamal echcharikkaiyudan kaaththiruppom 4. Iravum pakalum vilippaay iruthayam norungi jepippom karpulla kannikaiyaaka naamum Karththar varukaikkuk kaaththiruppom      5. Thavikkum ulakam antha naalil thalaikalai uyarththi nadappom varukai nerunga Karththar Yesu vaasarpatiyil vanthu nirkiraar

PowerPoint Presentation Slides for the song Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka – இயேசு வருகிறார் PPT
Pirathaana Thuuthan Ekkaalam Muzhanka PPT

இயேசு வருவார் காத்திருப்போம் வருகிறார் பிரதான தூதன் எக்காளம் முழங்கபரமன் சாயங்காலத்திலோ நடுராவினிலோசேவல் கூவிடும் நேரத்திலோஅதிகாலையிலோ வேளையிலோபரமன் இருவர் வயலில் இருப்பார்இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்ஒருவர் தமிழ்