Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Piriya Yesuvin Senai Veeragal - பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பல்லவி

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;
சிலுவை தோளில் சுமந்து போகலாம்,
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்

சரணங்கள்

1. நம் தேவன் சமாதானப் பிரபுவே
நம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;
நம் ஆத்ம சகாயர் அவரே!
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய

2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;
எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;
இயேசுவின் மகா அன்புக்காய்த் தத்தஞ் செய்வோம்,
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய

3. இயேசு கிறிஸ்துவின் அன்புக்காய் இறந்திடுவோம்!
புல் பூண்டுமேயானாலும் புசித்திடுவோம்;
முன் வைத்த காலை பின் வைக்கமாட்டோம்
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய

4. உலக நேசத்தின் ஊற்றை உடைத்து விட்டோம்;
உள்ள மாயைகளெல்லாமே ஒழித்து விட்டோம்;
உள்ளத்தையெல்லாம் உடையவர்க் கொதுக்கி விட்டோம்
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய

5. இதொன்றே இரட்சண்ய வழியென்றுணர்ந்தோம்
இதை இருதயத்திலிறுக இணைத்துவிட்டோம்
ஒன்றாயுயிர் வாழ்வோம் இன்றேல் உயிர்விடுவோம்
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய

6. சாத்தான் கோட்டைகளையெல்லாம் தகர்த்திடுவோம்
தக்க சமயத்தில் சத்தியத்தைச் சாற்றிடுவோம்
சற்றும் தயங்காமல் சாட்சியைத் தந்திடுவோம்
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய

7. அல்லேலூயா ஜெயத்தை அறிவித்திடுவோம்;
அவர் வருகையைப் பற்றி யுரைத்திடுவோம்;
அந்தகார ஆதிக்கங்களை அவமாக்குவோம்;
சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Lyrics in English

Pallavi

Piriya Yesuvin senai veerarkal naam
Senai veerarkal naam senai veerarkal naam;
Siluvai tholil sumanthu pokalaam,
Senai veerarkal naam senai veerarkal naam

Saranangal

1. Nam Dhevan samaathaanap pirapuvae
Nam sarvaayuthavarkkam thaalmai thaanae;
Nam aathma sakaayar avarae!
Senai veerarkal naam senai veerarkal naam – piriya

2. Eppothumae Yesuvai thiyaanippom;
Ellorum jeeviyaththaith thiyaakanj seyvom;
Yesuvin makaa anpukkaayth thaththanj seyvom,
Senai veerarkal naam senai veerarkal naam – piriya

3. Yesu Kristhuvin anpukkaay iranthiduvom!
Pul poonndumaeyaanaalum pusiththiduvom;
Mun vaiththa kaalai pin vaikkamaattaோm
Senai veerarkal naam senai veerarkal naam – piriya

4. Ulaka naesaththin oottaை utaiththu vittaோm;
Ulla maayaikalellaamae oliththu vittaோm;
Ullaththaiyellaam utaiyavark kothukki vittaோm
Senai veerarkal naam senai veerarkal naam – piriya

5. Ithonte iratchannya valiyentunarnthom
Ithai iruthayaththiliraுka innaiththuvittaோm
Ontayuyir vaalvom intel uyirviduvom
Senai veerarkal naam senai veerarkal naam – piriya

6. Saaththaan kottaைkalaiyellaam thakarththiduvom
Thakka samayaththil saththiyaththaich saattiduvom
Sattaுm thayangaamal saatchiyaith thanthiduvom
Senai veerarkal naam senai veerarkal naam – piriya

7. Alleluya jeyaththai ariviththiduvom;
Avar varukaiyaip patti yuraiththiduvom;
Anthakaara aathikkangalai avamaakkuvom;
Senai veerarkal naam senai veerarkal naam – piriya

PowerPoint Presentation Slides for the song Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் PPT
Piriya Yesuvin Senai Veeragal PPT

சேனை வீரர்கள் பிரிய நம் விட்டோம் இயேசுவின் செய்வோம் பல்லவி சிலுவை தோளில் சுமந்து போகலாம் சரணங்கள் தேவன் சமாதானப் பிரபுவே சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே தமிழ்