Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pottri Thuthipomae - போற்றித் துதிப்போமே

பல்லவி

போற்றித் துதிப்போமே – இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே

அனுபல்லவி

போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்

சரணங்கள்

1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி

2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை
கெத்சமனே தனில் பாவிகளுக்காகக்
கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி

3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம் – போற்றி

4. பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க் கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம் – போற்றி

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே Lyrics in English

Pallavi pottith thuthippomae – iratchakanai aettith thuthippomae anupallavi pottith thuthiththumae aettith thuthiththumae porparanai engal tharparanai naam saranangal 1. Suvarkkaththai vittavanai, puviyinil vanthu uthiththavanai paavikalin perum paavanthanaip pokkap paarinil paalakanaaka vanthavanai – potti 2. Pethlaekil uthiththa perum paavikalin naeyanai kethsamanae thanil paavikalukkaakak kannnneer vittu Jebam seythavanai naam – potti 3. Kalvaariyin arasai engal Sabaiththalaiyaam iyaesaiyanai eenak kurusilaraiyunntiruntha nal iyaesaiyanai, engal maesiyaavai, naam – potti 4. Penthekos thennaalil ontayk kootip piraarththiththa annaalil vallamaiyaana vithamaaka aaviyai varushiththu aaseervathiththavanai naam – potti

PowerPoint Presentation Slides for the song Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே PPT
Pottri Thuthipomae PPT

போற்றி எங்கள் போற்றித் துதிப்போமே ஏற்றித் துதித்துமே பாவிகளின் இயேசையனை பல்லவி இரட்சகனை அனுபல்லவி பொற்பரனை தற்பரனை சரணங்கள் சுவர்க்கத்தை விட்டவனை புவியினில் உதித்தவனை பாவந்தனைப் தமிழ்