Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Salae Managar Kzeel - சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்,
தோன்றும் ஒலிவடி வாரம்,-போக
வேண்டும் அரைமைல் தூரம்,-நடு
ராவினில்பதி னோரொருவரோடு
ஏகினார் கெத்செ மேனே நோக்கியே,
நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே
வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ
ரைத்துணை கொண்டாரந் நேரம்.

2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில்
நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர்
கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும்
சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே,
சக்தி முற்றிலும் அற்றுப்போகவே,
சாடினார் முகம் குப்புறத்தூளிலே
சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து
தேற்றினான் அங்கொரு தூதன்.

3. சொல்லாலே உல கங்கள் படைத்தவன்
சோர்கின்ற வாதையைப் பாரும்!-திகில்
துக்கம் வியாகுலச் சீரும்!-அன்று
பேய்க்கணங்களும் ஓடிடக் கடல்
கோஷ்டமுற்றிலு மாறிடப், புகழ்
பெற்றவன் கொடும் வாதைக்குள்ளாவதின்
காரணமென்ன சொல் வீரே!-அவர்
பேரில் விஸ்வாசம் வைப் பீரே.

4. அப்பா, என்னரு மைப்பிதாவே! உன்றன்
சித்தமே என் முழுப் பாக்யம்;-அதே
நித்தமும் என் தியான வாக்யம்;-திரள்
அந்தகாரமும் மாந்தர் பாவமும்
நிந்தையாகவே வந்துமோதினும்
கொஞ்சமும் மனம் மாறுவேனோ? இங்கே
வந்ததினால் என்ன லாபம்?-நரர்
எந்தவிதம் தீர்ப்பார் பாவம்?

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel Lyrics in English

1. Saalae maanakar geel veethivanthathum,
Thontum olivati vaaram,-poka
Vaenndum araimail thooram,-nadu
Raavinilpathi nororuvarodu
Aekinaar kethse maenae Nnokkiyae,
Nantena vettup paeraip piriththangae
Vaiththaarae thottaththin oram,-moova
Raiththunnai konndaaran naeram.

2. Kalleri thooram sentu mulangaalil
Nintu ookka Jebam seyya,-thuyar
Konndu raththa vaervai peyya,-perum
Saththaththodu kann nneerum pongavae,
Sakthi muttilum attaுppokavae,
Saatinaar mukam kuppuraththoolilae
Saattavum koodumo naathan?-vanthu
Thaettinaan angaொru thoothan.

3. Sollaalae ula kangal pataiththavan
Sorkinta vaathaiyaip paarum!-thikil
Thukkam viyaakulach seerum!-antu
Paeykkanangalum otidak kadal
Koshdamuttilu maaridap, pukal
Pettavan kodum vaathaikkullaavathin
Kaaranamenna sol veerae!-avar
Paeril visvaasam vaip peerae.

4. Appaa, ennaru maippithaavae! Untan
Siththamae en mulup paakyam;-athae
Niththamum en thiyaana vaakyam;-thiral
Anthakaaramum maanthar paavamum
Ninthaiyaakavae vanthumothinum
Konjamum manam maaraுvaeno? Ingae
Vanthathinaal enna laapam?-narar
Enthavitham theerppaar paavam?

PowerPoint Presentation Slides for the song சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Salae Managar Kzeel – சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் PPT
Salae Managar Kzeel PPT

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் தோன்றும் ஒலிவடி வாரம்போக அரைமைல் தூரம்நடு ராவினில்பதி னோரொருவரோடு ஏகினார் கெத்செ மேனே நோக்கியே நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே தமிழ்