Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seer Yesu Naadhanukku Jeyamangalam - சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்

அனுபல்லவி

பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு — சீர்

சரணங்கள்

1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு — சீர்

2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு — சீர்

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்

பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,
பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு — சீர்

Seer Yesu Naadhanukku Jeyamangalam Lyrics in English

Seer aesu naathanukku jeyamangalam – aathi thiri yaeka naathanukku supamangalam anupallavi paaraeraு neethanukku , parama porpaathanukku , naeraeraு pothanukku, niththiya sangaீthanukku — seer saranangal 1. Aathi saru vaesanukku, eesanukku mangalam akilap pira kaasanukku, naesanukku mangalam neethi paran paalanukku , niththiya kunnaalanukku, othum anukoolanukku , uyar manuvaelanukku — seer 2. Maanaapi maananukku , vaananukku mangalam valar kalaik kiyaananukku , njaananukku mangalam kaanaan nal thaeyanukkuk kannimariseyanukku, konaar sakaayanukku kooraு peththa laeyanukku — seer 3. Paththu latcha naththanukkuch suththanukku mangalam parama pathaththanukku niththanukku mangalam saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku, paththar upa kaaranukkup parama kumaaranukku — seer

PowerPoint Presentation Slides for the song Seer Yesu Naadhanukku Jeyamangalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seer Yesu Naadhanukku Jeyamangalam – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி PPT
Seer Yesu Naadhanukku Jeyamangalam PPT

மங்களம் சீர் பரம நாதனுக்கு ஆதி நித்திய ஏசு ஜெயமங்களம் திரி யேக சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு சங்கீதனுக்கு சரணங்கள் தமிழ்