Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seerthiriyaeka Vasthae - சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்

சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின்
திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ!

பார்படைத்தாளும் நாதா,
பரம சற்பிரசாதா,
நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! — சீர்

1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
தாங்கி ஆதரிப்போனே – நமோ நமோ!
சொந்தக் குமாரன் தந்தாய்,
சொல்லரும் நலமீந்தாய்,
எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ — சீர்

2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ!
எங்கும் நின் அரசேற,
எவரும் நின் புகழ்கூற,
துங்க மந்தையிற் சேர, நமோ நமோ நமோ — சீர்

3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட
பலமளித் தெமைக்காவா, நமோ நமோ!
கரிசித்துத்தா நற்புத்தி,
கபடற்ற மனசுத்தி,
திருமொழி பற்றும்பக்தி, நமோ நமோ நமோ — சீர்

Seerthiriyaeka Vasthae, Namo Namo Lyrics in English

Seerthiriyaeka vasthae, namo namo, nin thiruvatikku namasthae, namo namo! Paarpataiththaalum naathaa, parama sarpirasaathaa, naaruraுna thooyavaethaa, namo namo namo! — seer 1. Thanthaip paraaparanae namo namo, emaith thaangi aatharipponae – namo namo! Sonthak kumaaran thanthaay, sollarum nalameenthaay, enthavir pokkumenthaay, namo namo namo — seer 2. Engal pavaththinaasaa namo namo, puthu Jerusalem nakarraasaa namo namo! Engum nin arasera, evarum nin pukalkoora, thunga manthaiyir sera, namo namo namo — seer 3. Parisuththa aavithaevaa namo namo, thida palamalith themaikkaavaa, namo namo! Karisiththuththaa narpuththi, kapadatta manasuththi, thirumoli pattaுmpakthi, namo namo namo — seer

PowerPoint Presentation Slides for the song Seerthiriyaeka Vasthae, Namo Namo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seerthiriyaeka Vasthae – சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் PPT
Seerthiriyaeka Vasthae PPT

நமோ நின் சீர் சீர்திரியேக வஸ்தே திருவடிக்கு நமஸ்தே நமோ பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா சீர் தந்தைப் பராபரனே எமைத் தமிழ்