Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seeyon Paathaiyil Sellukintra - சீயோன் பாதையில் செல்லுகின்ற-

சரணங்கள்

1. சீயோன் பாதையில் செல்லுகின்ற
இயேசுவின் போர் வீரரே
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இருண்ட இவ்வுலகினிலே

பல்லவி

சேனையின் அதிபன்
சர்வ வல்ல இயேசுவே
சுவிசேஷத்தின் கொடி ஏற்றியே
சாற்றுவோம் அவர் சத்தியமே

2. தேவன் ஈந்த சர்வாயுதமே
தேவை இப்போர் முனையில்
சாத்தானின் சைன்னியம் நடுங்கிடவே
சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம் – சேனையின்

3. ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம்
யுத்தத்தில் போர் வீரரே
இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே
இப்போரில் ஜெயம் பெறுவோம் – சேனையின்

4. கேளும் பூமியின் எல்லைகளும்
மாளும் பல ஜாதியும்
என்றுமே சொந்தமாய்த் தந்திடுவேன்
என்றவர் வாக்களித்தாரே – சேனையின்

5. லோக சிற்றின்பம் நமக்கினியேன்
தியாகத்தின் பாதையிலே
இரத்த சாட்சியின் ஆவியோடே
சுவிசேஷப் படையெடுப்போம் – சேனையின்

6. அகில உலகமும் அறிந்திடவே
அவர் சுவிசேஷமே
கால் மதிக்கும் இடம் தந்திடவே
கர்த்தர் நம்மோடிருக்கிறார் – சேனையின்

சீயோன் பாதையில் செல்லுகின்ற- Seeyon Paathaiyil Sellukintra Lyrics in English

saranangal

1. seeyon paathaiyil sellukinta
Yesuvin por veerarae
Yesuvin naamaththai uyarththiduvom
irunnda ivvulakinilae

pallavi

senaiyin athipan
sarva valla Yesuvae
suviseshaththin koti aettiyae
saattuvom avar saththiyamae

2. thaevan eentha sarvaayuthamae
thaevai ippor munaiyil
saaththaanin sainniyam nadungidavae
santhoshiththae makilnthiduvom – senaiyin

3. sthoththira thoniyumae mulangiduvom
yuththaththil por veerarae
Yesuvin ninthaikal sumappavarae
ipporil jeyam peruvom – senaiyin

4. kaelum poomiyin ellaikalum
maalum pala jaathiyum
entumae sonthamaayth thanthiduvaen
entavar vaakkaliththaarae – senaiyin

5. loka sittinpam namakkiniyaen
thiyaakaththin paathaiyilae
iraththa saatchiyin aaviyotae
suviseshap pataiyeduppom – senaiyin

6. akila ulakamum arinthidavae
avar suviseshamae
kaal mathikkum idam thanthidavae
karththar nammotirukkiraar – senaiyin

PowerPoint Presentation Slides for the song சீயோன் பாதையில் செல்லுகின்ற- Seeyon Paathaiyil Sellukintra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seeyon Paathaiyil Sellukintra – சீயோன் பாதையில் செல்லுகின்ற- PPT
Seeyon Paathaiyil Sellukintra PPT

சேனையின் இயேசுவின் போர் வீரரே சரணங்கள் சீயோன் பாதையில் செல்லுகின்ற நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே பல்லவி அதிபன் சர்வ வல்ல இயேசுவே சுவிசேஷத்தின் கொடி தமிழ்