Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sooriyan Asthamithirundirum - சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

பல்லவி

சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில்
சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித்
துயர் தீர வேண்டினரே.

அனுபல்லவி

இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின்
இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். – சூரி

சரணங்கள்

1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது,
நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன,
வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம்,
தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். – சூரி

2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும்,
துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும்,
கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை கூர்வாய்!
அஷ்டதிக்கும் ஆள்வோய், அபயம் அபயம் என்றோம். – சூரி

3. எளியோர் வறுமையில் இன்னருள் ஊற்றுவாய்,
விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய்,
வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய்,
பழி பாவம் துணிவோரைத் தடுத்தாண்டு மாற்றுவாய். – சூரி

4. சருவ சக்தி சதா காலமும் உனதல்லோ?
வருத்த மெல்லாம் ஓடும் வார்த்தை ஒன்று சொல்ல,
உரித்தாய்க் கரத்தினால் உன்னடியாரைத் தொடுவாயே,
கருகுங் கங்குலிலும் யாம் களிப்பாய்ச் சுகிப்போமே. – சூரி

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும் Lyrics in English

Pallavi

Sooriyan asthamiththirunndidum vaelaiyil
Soolnthanar pinniyaalikal-unai nerungith
Thuyar theera vaenntinarae.

Anupallavi

Innaeram unthayai thaedum ivvatiyaarin
Innalellaam oda anpae unnarul eevaay. – soori

Saranangal

1. Paeyin akorathvam unaikkanndu paranthathu,
Nnoyum nirppanthamum nee thoda olinthana,
Vaaykkum sukaanantham unai nampinorkkellaam,
Thaayk karunnaiyutaiyoy, intum un thayai koorvaay. – soori

2. Ishdarin thurokaththaal idar atainthulalvorum,
Thushdar seythunpaththaal thayangith thavipporum,
Kashdamellaam theernthu kalikkak karunnai koorvaay!
Ashdathikkum aalvoy, apayam apayam entom. – soori

3. Eliyor varaுmaiyil innarul oottaுvaay,
Vilippotiravir kannnneer viduvoraith thaettaுvaay,
Vali thappi alaivorai vali kaatti aattaுvaay,
Pali paavam thunnivoraith thaduththaanndu maattaுvaay. – soori

4. Saruva sakthi sathaa kaalamum unathallo?
Varuththa mellaam odum vaarththai ontu solla,
Uriththaayk karaththinaal unnatiyaaraith thoduvaayae,
Karukung kangulilum yaam kalippaaych sukippomae. – soori

PowerPoint Presentation Slides for the song Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும் PPT
Sooriyan Asthamithirundirum PPT

சூரி கூர்வாய் அபயம் வழி பல்லவி சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள்உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே அனுபல்லவி இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் தமிழ்