Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthaen Ennai Yesuvae - தந்தேன் என்னை இயேசுவே

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்

Thanthaen Ennai Yesuvae Lyrics in English

Thanthaen ennai Yesuvae intha naeramae umakkae unthanukkae ooliyanj seyyath thanthaen ennaith thaangiyarulum — thanthaen 1. Jeeva kaalam muluthum thaeva panni seythiduvaen poovil kadum por purikaiyil kaavum unthan karaththinil vaiththu — thanthaen 2. Ulakor ennai nerukkip palamaay yuththam seythitinum nalamaay sarva aayutham poonndu naanilaththinil naathaa velluvaen — thanthaen 3. Unthan siththamae seyvaen enthan siththam oliththiduvaen entha idam enakkuk kaattinum Yesuvae angae itho pokiraேn — thanthaen 4. Kashdam nashdam vanthaalum thushdar kootich soolnthittalum ashdathikkum aalum thaevanae atiyaen ummil amarach seythidum — thanthaen 5. Ontumillai naan aiyaa ummaalanti ontum seyyaen antu seesharkalukkaliththa aaviyaal inte atiyaenai nirappum — thanthaen

PowerPoint Presentation Slides for the song Thanthaen Ennai Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthaen Ennai Yesuvae – தந்தேன் என்னை இயேசுவே PPT
Thanthaen Ennai Yesuvae PPT

தந்தேன் என்னை இயேசுவே உந்தன் நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் என்னைத் தாங்கியருளும் தந்தேன் ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் தமிழ்