பல்லவி
தருணம் இதுவே, கிருபை கூரும்,
வழிபாரும், பதம் தாரும், தாரும்.
சரணங்கள்
1. கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;
அருமை ரட்சக யேசு நாதா,-உல
கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன்
அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர
சாதா, நீதா!- தருணம்
2. வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி
மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன
விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந்
நூலா, சீலா! – தருணம்
3. அற்ப உலக வாழ்வில் அலைந்து, நிலை குலைந்து,
அலகைப்படு குழியில் வீழ்ந்து,-தாழ்ந்து,
அஞ்சி அஞ்சி நலிந் தேனே;-அடிமைக்
கஞ்சல் என்றுசொல்லும் கோனே,-சீ
மானே, தானே! – தருணம்
4. இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம்,-அவை
சிந்தித்து மடியாவிச் சேத்ரம்,-நிர்ப்
பந்த அடியர்கள் எம் மாத்ரம்!-பத
தோத்ரம்! தோத்ரம்! – தருணம்
Tharunam Ithuvae Kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும் Lyrics in English
Pallavi
Tharunam ithuvae, kirupai koorum,
Valipaarum, patham thaarum, thaarum.
Saranangal
1. Karunnai theyva kumaaraa, kana manudavathaaraa;
Arumai ratchaka yaesu naathaa,-ula
Kanaiththum vanangum sathya vaethaa,-untan
Atiyark karulum thirup paathaa,-sathpra
Saathaa, neethaa!- tharunam
2. Vaanaththilirunthu vantha njaanaththoli sirantha
Makimaip pirathaavin thirup paalaa,-aathi
Mainthark kirangum anukoolaa,-kana
Vinthaik karunnai manuvaelaa,-meyn
Noolaa, seelaa! – tharunam
3. Arpa ulaka vaalvil alainthu, nilai kulainthu,
Alakaippadu kuliyil veelnthu,-thaalnthu,
Anji anji nalin thaenae;-atimaik
Kanjal entusollum konae,-see
Maanae, thaanae! – tharunam
4. Intha ulakath themaich santhith thanukkirakiththa
Sonthak kirupaikal maa kaathram,-avai
Sinthiththu matiyaavich sethram,-nirp
Pantha atiyarkal em maathram!-patha
Thothram! Thothram! – tharunam
PowerPoint Presentation Slides for the song Tharunam Ithuvae Kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharunam Ithuvae Kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும் PPT
Tharunam Ithuvae Kirubai Koorum PPT

