Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Then Inimaiyilum Yesuvin - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்

Then Inimaiyilum Yesuvin Lyrics Lyrics in English

Thaen inimaiyilum Yesuvin naamam thivviya mathuramaamae – athaith thaetiyae naati otiyae varuvaay, thinamum nee manamae 1. Kaasinithanilae naesamathaakak kashdaththai uththariththae – paavak kasadathai araுththuch saapaththaith tholaiththaar kanndunar nee manamae – thaen 2. Paaviyai meetkath thaaviyae uyiraith thaamae eenthavaraam – pinnum naemiyaam karunnai nilaivaramunndu nitham thuthi en manamae – thaen 3. Kaalaiyil panipol maayamaay yaavum (ulakam) upaayamaay neengividum – entum karththarin paatham nichchayam nampu karuththaay nee manamae – thaen 4. Thunpaththil inpam thollaiyil nalla thunnaivaraam naesaridam – neeyum anpathaaych sernthaal annaiththunaik kaappaar aasai kol nee manamae – thaen 5. Poolokaththaarum maelokaththaarum pukalnthu pottaு naamam – athaip poonndukonndaalthaan ponnakar vaalvil pukuvaay nee manamae – thaen

PowerPoint Presentation Slides for the song Then Inimaiyilum Yesuvin Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் PPT
Then Inimaiyilum Yesuvin PPT

தேன் மனமே இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் தமிழ்