Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thothiram Pugal Keerthanam - தோத்திரம் புகழ் கீர்த்தனம்

பல்லவி

தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!

அனுபல்லவி

கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்

சரணங்கள்
1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை
ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய்[1]
நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ
நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய்
நின்றீரே, நடுவராய் நின்றீரே; தீதை எல்லாம்
கொன்றீரே, பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய. – தோத்தி

2. சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;-நேய
சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்;
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;- கரம்
நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்;
நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம்
சொல்லும், ஐயா; தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா! – தோத்தி

3. நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;-பவ
நிந்தையோ டென் சுய கந்தை[2] அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்;
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும்; – பதஞ்
சாற்றித் தினம் உமைப் போற்றிப் பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்;
சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள
சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே, தேவே. – தோத்தி

Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம் Lyrics in English

Pallavi thoththiram, pukal geerththanam, jeya sopanam umakkaiyaa!-thuthi sollavum theethai vellavum krupai soottuveer, kiristhaiyaa! Anupallavi koththiravali sirantha yootha nal kottavaa, thaevapaalaa, manuvaelaa, marainoolaa, sengaோlanu koolaa.- thoth saranangal 1. Enthanai meetka neer intha ulakinil vanthu pirantheer; nan manuvaay- marai aettith thinam enai aatti nan moliyaal thaettineer; muttilum thanuvaay[1] ninthai atainthu meych sontha uthiraththaich sinthineer; eththanai parivaay- thaeva neethiyum vilangach seythu pavamanu saathikkirangi narkuruvaay ninteerae, naduvaraay ninteerae; theethai ellaam konteerae, pasaasaiyum venteerae, jeyam konnteerae nithya. – thoththi 2. Suththa suvisesha saththiyamoliyai viththarikka varanthaarum;-naeya sooriya kirana veeriyaththaal enak kaarokkiyam arulkoorum; niththam enaith thaeva paththiyil nadaththich siththam irangik kannpaarum;- karam neettik kirupaiyaich soottik kavalaiyai otti en thuyaraith theerum; nillum, aiyaa, en pakkaththil nillum, aiyaa; thinam nalam sollum, aiyaa; theeyon thanai vellum, aiyaa; theethaik kollum, aiyaa, thuyyaa! – thoththi 3. Niththiya jeevanaip pettaுmmotirukkach suththi kariththennai aalum;-pava ninthaiyo den suya kanthai[2] akatti mey vinthaik kirupaiyaal soolum; saththiya vasanaviththaal enai jenippith then manathinil vaalum; – pathanj saattith thinam umaip pottip panninthidath thaetti enai arasaalum; sarkuruvae, kiristhenum sarkuruvae, jeevan ula sorkuruvae, niththiyaanantha narkuruvae, parap porkuruvae, thaevae. – thoththi

PowerPoint Presentation Slides for the song Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம் PPT
Thothiram Pugal Keerthanam PPT

ஐயா தினம் எனை தோத்தி தீதை நன் தேவ நின்றீரே நில்லும் சற்குருவே பல்லவி தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையாதுதி சொல்லவும் வெல்லவும் தமிழ்