தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக — தோத்திரம்
1. வல்ல வான ஞான விநோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே — தோத்திரம்
2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே — தோத்திரம்
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே — தோத்திரம்
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன் — தோத்திரம்
5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ ?
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன் — தோத்திரம்
Thoththiram Thuthi Paaththiraa Lyrics in English
Thoththiram thuthi paaththiraa ummai
Intum entum thuthiththiduvaen
Kaaththeerae ennaik karuththaaka
Valuvaamal ennai umakkaaka
Eduththeer enaiyum umakkaaka
Koduththeer umaiyum enakkaaka — thoththiram
1. Valla vaana njaana viNnothaa
Thuthiyae thuthiyae thuthiththiduvaen
Ellaak kuraiyum theerththeerae
Thollai yaavum tholaiththeerae
Allal yaavum araுththeerae
Alaiyum enaiyum meettirae — thoththiram
2. Nampinoraik kaakkum thaevaa
Thuthiyae thuthiyae thuthiththiduvaen
Ampuviyaavum pataiththeerae
Amparaa unthan vaakkaalae
Emparaa ellaam eentheerae
Nampinork kunthan thayavaalae — thoththiram
3. Kannnnin mannipol kaaththeerae emmaith
Thuthiyae thuthiyae thuthiththiduvaen
Annnalae unthan arulaalae
Atiyaaraik kann paarththeerae
Mannaa emakkum neer thaamae
Ennaalum engal thunnai neerae — thoththiram
4. Theeyon ampukal thaakkaathae emmaith
Thuthiyae thuthiyae thuthiththiduvaen
Thaevaa neer unthan sirakaalae
Thinamum mootik kaaththeerae
Theethanu kaathum maraivinilae
Thaetiyumathati thangiduvaen — thoththiram
5. Alleluya thoththiramae
Thuthiyae thuthiyae thuthiththiduvaen
Akila sirushtikalum thuthikka
Atimai thuthiyaa thiruppaeno ?
Allum pakalum niththiyamaay
Anpae umaiyum thuthiththiduvaen — thoththiram
PowerPoint Presentation Slides for the song Thoththiram Thuthi Paaththiraa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoththiram Thuthi Paaththiraa – தோத்திரம் துதி பாத்திரா உம்மை PPT
Thoththiram Thuthi Paaththiraa PPT

