Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thunganil Othunguvon - துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் — துங்கனில்

1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே — துங்கனில்

2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் — துங்கனில்

3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் — துங்கனில்

4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே — துங்கனில்

5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே — துங்கனில்

6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள் — துங்கனில்

Thunganil Othunguvon, Pangamintith Thanguvaan Lyrics in English

Thunganil othunguvon, pangamintith thanguvaan kangul paka lumparanaar kaaval ara nnaathalaal — thunganil 1. Vaedan kannnni kuththungaal, vikkinangal suttaுngaal, mootiunaik kaapparae, or mosamintich serpparae — thunganil 2. Pakkaththilae aayiram, paalae pathinaayiram sikkena veelnthaalumae, theengunai anndaathukaann — thunganil 3. Kannnninaalae paarkkuvaay, kadavul seyal Nnokkuvaay annnalae un ataikkalam, aanndavan un thaaparam — thunganil 4. Theengunai anndaalum, theenangal theenndaamalum, paangu thoothar kaapanthil paththiramaay vaalvaiyae — thunganil 5. Paatham kallida raamal, pakaivar ukram meeraamal thoothar unaik kaikalil thookki aenthik kolvarae — thunganil 6. Needunaatkalaakavae kaedu thunpam pokavae, veeduparatheesinil sooduvaan maa makimaikal — thunganil

PowerPoint Presentation Slides for the song Thunganil Othunguvon, Pangamintith Thanguvaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான் PPT
Thunganil Othunguvon PPT

துங்கனில் தீங்குனை தூதர் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான் கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் துங்கனில் வேடன் கண்ணி குத்துங்கால் விக்கினங்கள் சுற்றுங்கால் தமிழ்