Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakothaasai Varum Nal Uyar - உனக்கொத்தாசை வரும் நல் உயர்

நல் உயர் பருவதம் இதோ

பல்லவி

உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ!

அனுபல்லவி

தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன

சரணங்கள்

1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்
மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன

2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;
மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன

3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;
நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். – உன

4. பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும்,
இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. – உன

5. தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்;
தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. – உன

6. போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்;
காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. – உன

7. துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்,
இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. – உன

Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர் Lyrics in English

Nal uyar paruvatham itho pallavi unakkoththaasai varum nal uyar paruvatham,-itho! Anupallavi thinamum manathu nonthu sinthai kalanguvonae. – una saranangal 1. Vaanam puvi thiraiyum vakuththa nanmaip pithaavin maatchimaiyin karamae vallamaiyulla thallo? – una 2. Kaalaith thallaadavottar, karaththaith thalaravottar; maalai urangamaattar, marathiyaayp poka maattar. – una 3. Karththarunaik kaappavaraam, karamathil serppavaraam; niththiyam untanukku nilalaayiruppavaraam. – una 4. Pakalil veyilenilum, iravil nilavenilum, ikal tharuvathumillai, innal seyvathumillai. – una 5. Theengu thodaraathunnai, theemai padaraathunmael; thaanguvaar thoothar koti, thaalidaraathapati. – una 6. Pokkum aaseervaathamaam, varaththum aaseervaathamaam; kaakkaik kunjukal muthal kathari nampividumae. – una 7. Thunpa thuyaraththilum thukka samayaththilum, inpamuraுm poluthum ellaam unakkavarae. – una

PowerPoint Presentation Slides for the song Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர் PPT
Unakothaasai Varum Nal Uyar PPT

உன நல் உயர் ஆசீர்வாதமாம் பருவதம் இதோ பல்லவி உனக்கொத்தாசை பருவதம்இதோ அனுபல்லவி தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே சரணங்கள் வானம் புவி திரையும் தமிழ்