பல்லவி
வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச்
சேரும், வினையறுத் தெனைச் சேரும்.
அனுபல்லவி
ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும்
சரணங்கள்
1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில்
விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே,
ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும்
சதியை அகற்றி எனையாட் கொள்ளவே,
அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல்
அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும்
2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத
மார்க்கத் தொழுகி உமைப் போற்றுதற்கும்,
சூடென் கெட்ட குணத்தை மாற்றுதற்கும்,-சற்று
துலங்கும் தீபத்திற் கெண்ணெய் ஊற்றுதற்கும்,
நாடும் கதியில் கரை ஏற்றுதற்கும்,-நித்ய
நன்மைகளினால் எனைத் தேற்றுதற்கும், – வாரும்
வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum Lyrics in English
Pallavi
Vaarum, thaettaravarae, vaarum;-enaich
Serum, vinaiyaraுth thenaich serum.
Anupallavi
Aarum maattaுthar karithaana pavam theerumpati seyyum, thiravaanae. – vaarum
Saranangal
1. Mikavum paal nilam ennullamae;-athil
Vithaikkum thiru vasanaththaiyum thallavae,
Jakamum maamisa aasaikalum mellavae,-seyyum
Sathiyai akatti enaiyaat kollavae,
Aka meethaa nantham konndun pukal villavae,-senjaொl
Atiyan naan umaip paati makil kollavae, – vaarum
2. Vaadum manathinai aattaுtharkum,-vaetha
Maarkkath tholuki umaip pottaுtharkum,
Sooden ketta kunaththai maattaுtharkum,-sattaு
Thulangum theepaththir kennnney oottaுtharkum,
Naadum kathiyil karai aettaுtharkum,-nithya
Nanmaikalinaal enaith thaettaுtharkum, – vaarum
PowerPoint Presentation Slides for the song வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Thettaravare Vaarum – வாரும் தேற்றரவரே வாரும் PPT
Vaarum Thettaravare Vaarum PPT

