1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா,
நல்ல நேசமீட்பர் நீர்;
பற்று, பாசம், கட்டு முற்றும்
அற்றுப்போகப்பண்ணுவீர்.
2.அருள் ஜோதி தோன்றிடாமல்,
இருள் மூடிக் கிடந்தோம்;
திக்கில்லாமல் பாவப் பற்றில்
சிக்கிக்கொண்டே இருந்தோம்.
3. பக்தி ஒன்றுமில்லை, பாரும்,
சக்தியற்றுப் போயினோம்;
ஜீவ பாதை சென்றிடாமல்
பாவ பாதை நடந்தோம்.
4. இயேசு நாதரே, இப்போது
நேசமாக நிற்கிறீர்;
என்னை நம்பு, பாவம் நீக்கி
உன்னைக் காப்பேன் என்கிறீர்.
5. நம்பி வந்து, பாவ நாசா,
உந்தன் பாதம் அண்டினோம்;
தூய ரத்தம் பாயக் கண்டு,
தீய செய்கை வெறுத்தோம்.
6.பாவச் சேற்றிலே விழாமல்
தேவரீரே காத்திடும்;
வல்ல ஆவியாலே என்றும்
வெல்லச்செய்து ரட்சியும்.
Valla Yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா Lyrics in English
1.valla Yesu Kristhu naathaa, nalla naesameetpar neer; pattaு, paasam, kattu muttaுm attaுppokappannnuveer. 2.arul jothi thontidaamal, irul mootik kidanthom; thikkillaamal paavap pattil sikkikkonntae irunthom. 3. Pakthi ontumillai, paarum, sakthiyattaுp poyinom; jeeva paathai sentidaamal paava paathai nadanthom. 4. Yesu naatharae, ippothu naesamaaka nirkireer; ennai nampu, paavam neekki unnaik kaappaen enkireer. 5. Nampi vanthu, paava naasaa, unthan paatham anntinom; thooya raththam paayak kanndu, theeya seykai veraுththom. 6.paavach settilae vilaamal thaevareerae kaaththidum; valla aaviyaalae entum vellachcheythu ratchiyum.
PowerPoint Presentation Slides for the song Valla Yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valla Yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா PPT
Valla Yesu Kiristhu Naatha PPT

