Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vin Greedam Pera - விண் கிரீடம் பெற

Vin greedam Pera – விண் கிரீடம் பெற

1.விண் கிரீடம் பெறப் போருக்குக்
கிறிஸ்தேசு செல்கின்றார்;
அவரின் வெற்றிக் கொடிக்குக்
கீழாகப் போவோன் யார்?
தன் துக்கப் பாத்ரம் குடித்துச்
சோராமல் நிற்போன் யார்?
தன் சிலுவையை எடுத்து
அவர் பின் செல்வோன் யார்?

2.முதலாம் ரத்த சாட்சியாய்
மரித்தோன், வானத்தில்
கர்த்தாவை விசுவாசமாய்க்
கண்ணோக்கித் துன்பத்தில்
கொலைஞர்க்காக வேண்டிட,
சண்டாளரால் மாண்டான்;
பகைஞர்க்காக ஜெபிக்க
யார் அவர் பின் செல்வான்?

3.தெய்வாவி வந்து தங்கின
ஈராறு சீஷர்கள்,
மகத்வமாய் விளங்கின
நம்பிக்கை யுள்ளோர்கள்,
தீ, துன்பம், வாளைச் சகித்தே
சிங்கத்தால் பீறுண்டார்;
மரிக்கவும் அஞ்சாமலே
அவர்போல் செல்வோர் யார்?

4.சிறந்த சேனா வீரராய்க்
கெம்பீரக் கூட்டத்தார்
சிங்காசனத்தைச் சூழ்ந்தோராய்க்
கொண்டாடி நிற்கிறார்;
எப்பாடும் நீங்கி மோட்சத்தைச்
சேர்ந்தோர்போல் நாங்களும்
உம்மிடம் சேர அருளை,
கர்த்தா, கடாட்சியும்.

Vin Greedam Pera – விண் கிரீடம் பெற Lyrics in English

Vin greedam Pera – vinn kireedam pera 1.vinn kireedam perap porukkuk kiristhaesu selkintar; avarin vettik kotikkuk geelaakap povon yaar? Than thukkap paathram kutiththuch soraamal nirpon yaar? Than siluvaiyai eduththu avar pin selvon yaar? 2.muthalaam raththa saatchiyaay mariththon, vaanaththil karththaavai visuvaasamaayk kannnnokkith thunpaththil kolainjarkkaaka vaenntida, sanndaalaraal maanndaan; pakainjarkkaaka jepikka yaar avar pin selvaan? 3.theyvaavi vanthu thangina eeraaraு seesharkal, makathvamaay vilangina nampikkai yullorkal, thee, thunpam, vaalaich sakiththae singaththaal peeraுnndaar; marikkavum anjaamalae avarpol selvor yaar? 4.sirantha senaa veeraraayk kempeerak koottaththaar singaasanaththaich soolnthoraayk konndaati nirkiraar; eppaadum neengi motchaththaich sernthorpol naangalum ummidam sera arulai, karththaa, kadaatchiyum.

PowerPoint Presentation Slides for the song Vin Greedam Pera – விண் கிரீடம் பெற

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vin Greedam Pera – விண் கிரீடம் பெற PPT
Vin Greedam Pera PPT

Vin Greedam Pera – விண் கிரீடம் பெற Song Meaning

Vin greedam Pera – Vin Greedam Pera

1. To fight for the celestial crown
Christ goes;
His victory flag
Who will go down?
Drink his cup of sorrow
Who is tired of standing?
took up his cross
Who will he follow?

2. As the first blood witness
Marithon, in the sky
Be faithful to the Lord
Looking forward to suffering
Pray for the murderer,
Mandan by Sandalar;
To pray for the enemy
Who will follow him?

3. Goddess came and stayed
Iraru Disciples,
It was great
Believers,
He endured fire, suffering, and the sword
He was frightened by the lion;
Without fear of death
Who will go like him?

4. As a great army man
Kemperak added
Surrounding the throne
Celebrating;
Moksha is forever gone
We are together
Grace to join you,
Lord, the Messenger too.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விண் கிரீடம் Vin greedam Pera பெற பெறப் போருக்குக் கிறிஸ்தேசு செல்கின்றார் அவரின் வெற்றிக் கொடிக்குக் கீழாகப் போவோன் துக்கப் பாத்ரம் குடித்துச் சோராமல் தமிழ்