Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yerukindrar Thalladi Thavalnthu - ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு

2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு

3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு

4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு

5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு

6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க – ஏறு

Yerukindrar Thalladi Thavalnthu Lyrics in English

Aeraுkintar thallaatith thavalnthu kalaippotae en Yesu kurusai sumanthae en naesar kolkothaa malaiyinmael nadanthae aeraுkintar 1. Kannaththil avan ongi atikkach sinnap pillaipol aengi nintar anthap pilaaththum kaiyaik kaluvi aanndavarai anuppukintan – aeraு 2. Minjum pelaththaal eetti eduththae nenjaip pilanthaan aa! Kodumai iraththamum neerum oti varuthae iratchakarai Nnokkiyae paar – aeraு 3. Inthappaadukal unthan vaalvukkaaych sonthappaduththi aettaுkkonndaar naesikkintayo Yesu naatharai naesiththu vaa kuruseduththae – aeraு 4. Seval koovidum moontu vaelaiyum sontha kuruvai maraுthaliththaan oti oliyum paethuruvaiyum thaeti anpaay Nnokkukintar – aeraு 5. Pinnae nadantha anpin seeshanpol pinpatti vaa siluvai varai kaatiyaip pol kasanthirukkum kashdangalai avaridam sol – aeraு 6. Settaைkalin geel serththanaiththidum sonthath thaayin anpithuvae erusalamae! Erusalamae! Entaluthaar kann kalanga – aeraு

PowerPoint Presentation Slides for the song Yerukindrar Thalladi Thavalnthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yerukindrar Thalladi Thavalnthu – ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே PPT
Yerukindrar Thalladi Thavalnthu PPT

ஏறு ஏறுகின்றார் இயேசு வா தள்ளாடித் தவழ்ந்து களைப்போடேஎன் குருசை சுமந்தேஎன் நேசர் கொல்கொதா மலையின்மேல்நடந்தே கன்னத்தில் ஓங்கி அடிக்கச்சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்அந்தப் தமிழ்