Proverbs 31:1-9 in Tamil in Tamil

நீதிமொழிகள் 31

1 ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது: The words of king Lemuel, the prophecy that his mother taught him.

2 என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே, What, my son? and what, the son of my womb? and what, the son of my vows?

3 ஸ்திரீகளுக்கு உன் பலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. Give not thy strength unto women, nor thy ways to that which destroyeth kings.

4 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. It is not for kings, O Lemuel, it is not for kings to drink wine; nor for princes strong drink:

5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். Lest they drink, and forget the law, and pervert the judgment of any of the afflicted.

6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்; Give strong drink unto him that is ready to perish, and wine unto those that be of heavy hearts.

7 அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும். Let him drink, and forget his poverty, and remember his misery no more.

8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற. Open thy mouth for the dumb in the cause of all such as are appointed to destruction.

9 உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய். Open thy mouth, judge righteously, and plead the cause of the poor and needy.

Read Full Chapter : நீதிமொழிகள் 31